இந்திய அரசு மொத்தம் 101.70 கோடி தடுப்பூசிகளை விநியோகம் செய்துள்ளது.
கடந்த 2020 மார்ச் மாதத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை சற்று .கூட தொடங்கியது. இதனால் மத்திய அரசு மொத்த இந்தியாவையும் ஊரடங்கு சட்டத்திற்குள் கொண்டு வந்தது.
பொது போக்குவரத்து முடக்கப்பட்டது, பள்ளிகள், கோவில்கள், அலுவலகங்கள் என அனைத்தும் மூடப்பட்டன.
இந்திய மருத்துவ நிபுணர்களும் கொரோனாவை எதிர்த்து போரிட மருத்துவ துறையை பலம் கொண்டதாக மாற்ற முயற்சி செய்து வந்தனர்.
புனே சீரம் இன்ஸ்டிடூட்டில் தடுப்பூசி தயாரிப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. பல பரிசோதனைகள் செய்யப்பட்டன.
இதன் முடிவாக கோவிஷீல்டு மற்றும் கோவாக்ஸின் தடுப்பு ஊசிகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டன. இது புழக்கத்திற்கும் வந்தது.
தற்போது மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கோவிட் ஊசிகள் பற்றிய தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த தரவின்படி மத்திய அரசு 101.70 கோடி தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு வினியோகம் செய்துள்ளது எனவும், ஒவ்வொரு மாநில அரசிடமும் தற்போது 10 கோடி கோவிட் வாக்ஸின்கள் கையிருப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.