102 ம் ஆண்டு சுதந்திர தின விழா! ஆனாலும் துப்பாக்கி சூட்டினால் பொதுமக்கள் பலியான பரிதாபம்!
ஆப்கானிஸ்தானுக்கும், தலீபான்களுக்கும் ஆட்சியை கைப்பற்றியது தொடர்பாக போர் நடந்தது. அதில் அங்கிருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதன் காரணமாக தலீபான்கள் சுலபமாக ஆட்சியை கைப்பற்றிவிட்டனர் என்றும் சொல்லப் படுகிறது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் ஆட்சியை ஆரம்பித்து விட்டனர். இதன் காரணமாக உலக மக்கள் அனைவருமே இனி ஆப்கானிஸ்தானின் நிலை குறித்து அச்சம் தெரிவித்து வருகிறது. அங்கிருந்து வெளியேறும் மக்களுக்கு அனைத்து நாடுகளும் அனுமதி அளிக்க வேண்டும் என்றும் பல ஆட்சியாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆப்கனுக்கு சுதந்திரம் கிடைத்து 102 ஆண்டுகள் ஆனதை தொடர்ந்து அங்கு சுதந்திர தின விழா கொண்டாட திட்டம் தீட்டி உள்ளனர். ஆப்கானிஸ்தான் ஆங்கிலேயர்களிடமிருந்து கடந்த 1919 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதி ஆப்கானிஸ்தான் விடுதலை பெற்றது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் அசாதாபாத் என்ற இடத்தில் அந்நாட்டின் 102வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் அங்குள்ள மக்கள் அனைவரும் இணைந்து ஆப்கானிஸ்தானின் மூவர்ண தேசியக் கொடியை பேரணியாகச் எடுத்து சென்றனர்.
அதில் ஏராளமானவர்கள் ஆர்வத்தோடு கலந்தும் கொண்டனர். அப்போது ஆப்கானிஸ்தான் தேசியக் கொடியை அசைத்து சென்ற மக்களை குறிவைத்து தலிபான்கள் சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். அதன் காரணமாக மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடி உள்ளனர். எனவே அந்த அசம்பாவிதத்தில், கூட்ட நெரிசலில் பலர் சிக்கி காயம் அடைந்து உள்ளனர். அந்தக் கூட்ட நெரிசலில் சிக்கிய பொதுமக்கள் இருவர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உயிரிழப்புகள் கூட்ட நெரிசலினால் ஏற்பட்டதா அல்லது துப்பாக்கி சூட்டினால் உயிரிழப்புகள் ஏற்பட்டதா? என்பது குறித்த உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்தச் சம்பவம் தொடர்பாக தலிபான்கள் தரப்பிலிருந்து எந்த வித அதிகாரபூர்வ அறிவிப்போ அல்லது விளக்கமோ இதுவரை வெளியாகவில்லை.