சோழர் குல வாரிசுகளால் ராஜ ராஜன் பள்ளிப்படையில் பிரமாண்டமாக நடைபெறும் 1034 ஆவது ஆண்டு சதய விழா

0
447

சோழர் குல வாரிசுகளால் ராஜ ராஜன் பள்ளிப்படையில் பிரமாண்டமாக நடைபெறும் 1034 ஆவது ஆண்டு சதய விழா

பிற்கால சோழர்களின் வரலாற்றில் மாபெரும் மைல் கல்லாக விளங்கியவர் ராஜ ராஜன் என்ற அடைமொழியால் அழைக்கப்படும் அருள்மொழிவர்மன். அருள்மொழிவர்மனின் ஆட்சிக்கு பின்னரே சோழர்களின் ஆட்சி கடல் கடந்தும் பரந்து விரிய தொடங்கியது .

உலகமே கண்டு வியக்கும் தஞ்சை பெரிய கோவிலை கட்டிய ராஜ ராஜன் அதிதீவிர சிவ பக்தன். ஏராளமான சிவாலயங்களை அமைத்து சைவத்தின் மறுமலர்ச்சிக்கு வித்திட்டான். தில்லை நடராஜர் கோவிலில் தீட்சிதர்களால் பூட்டி வைக்கப்பட்டிருந்த பன்னிரண்டு திருமுறைகளை மீட்டெடுத்து அதைத் தொகுத்து உலகிற்கு கொடுத்துச் சென்றவன் ராஜ ராஜனே. அவர் கொண்டிருந்த தீவிர சிவ பக்தியின் காரணமாக பண்டித சோழன், சிவபாதசேகரன் என பல பட்டப்பெயர்கள் அவருக்கு உண்டு.

1034th Raja Raja Cholan Sadhaya Vizha Function-News4 Tamil Latest Online Tamil News Today
1034th Raja Raja Cholan Sadhaya Vizha Function-News4 Tamil Latest Online Tamil News Today

அந்த சிவபாதசேகரன் தனது இறுதிக்காலத்தில் சோழ தேசத்தின் ஆட்சிப்பொறுப்பை தனது மகன் ராஜேந்திர சோழனிடம் ஒப்படைத்து விட்டு தவ வாழ்க்கையை மேற்கொண்டு சிவ வழியில் முக்தி அடைந்த இடம் தான் சிவபாதசேகர மங்களம் அதுவே இன்று திருமாளிகை பள்ளிப்படை என்று அறியப்படுகின்ற கும்பகோணம் அருகில் உள்ள உடையாளூர் ஆகும்.

ராஜ ராஜனின் சதய விழா பல நூற்றாண்டுகளுக்கு பிறகு சமீப காலமாக மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான 1034 ஆம் ஆண்டு சதயவிழா 05/11/2019 மற்றும் 06/11/2019 ஆகிய இரு தினங்களில் நடைபெறுகிறது. விழாவினை தலைமை தாங்கி நடத்துபவர் சோழ வம்சத்தின் இன்றைய வாரிசான பிச்சாவரம் பாளையக்காரர் வம்சாவளியின் வாரிசு மகாராஜா ஸ்ரீ மன்னர் மன்னன் சூரப்ப சோழகனார் 06/11/2019 அன்று காலை கொடியேற்றி விழாவினை தொடங்கி வைக்கிறார்.

சோழர்களின் குல தெய்வமான தில்லை நடராஜர் ஆலயத்தில் சோழ அரசர்களுக்கு மட்டுமே காலம் காலமாக வழங்கப்படும் முடிசூட்டும் உரிமையும், சோழ மண்டகப்படி செய்யும் முழு உரிமையும் பெற்றவர் இவர் வம்சா வழியினரே. இவரே நேரடியாக வந்து விழாவினை நடத்தி வைப்பது விழாவின் தனிச்சிறப்பு . சதய நட்சத்திரத்தின் நாளான அன்று புதிதாக வடிவமைக்கப்பட்ட 127 கிலோ எடையிலான பஞ்சலோக ராஜ ராஜன் சிலை அவரது பள்ளிப்படையில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

1034th Raja Raja Cholan Sadhaya Vizha Function-News4 Tamil Latest Online Tamil News Today

சேர, சோழ, பாண்டிய, பல்லவ வழி வந்த ஷத்திரியர்களின் வாரிசுகள் புடை சூழ திருவாசகத்தில் மாணிக்கவாசகர் பாடிய படையாட்சி பதிகம் பாடுவதில் தொடங்கி , ஒவ்வொரு நிகழ்வும் அச்சு அசலாக மன்னர்கள் கால முழுமையான ஷத்திரிய விழாவாகவே உடையாளூரில் சதயவிழா நடைபெறுகிறது.