சமூக வலைதள பக்கத்தில் 63 கணக்குகள் உட்பட 104 யூடியூப் சேனல்கள் முடக்கம்! மத்திய அரசு அதிரடி!
தற்போது வளர்ந்து வரும் காலகட்டத்தில் அனைத்துமே ஆன்லைன் முறையில் மாறி வருகின்றது.உலகம் முழுவதுமே ஒரு போனில் அடங்குகின்றது.சமூக வலைத்தளமான டுவிட்டர்,பேஸ்புக், வாட்ஸ் அப்,இன்ஸ்ட்டாகிராம்,யூடியூப் போன்றவைகள் மூலம் எங்கு என்ன நடக்கின்றது என உடனுக்குடன் நாம் அறிந்து கொள்ள முடியும்.
ஆனால் இவ்வாறு உள்ள சமூக வலைதளத்தில் சிலரும் போலி தகவல்களை பரப்பி வருகின்றனர்.இந்நிலையில் நேற்று மாநிலங்களவையில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் கூறுகையில் தவறான மற்றும் தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விதமான தகவல்களை ஒளிபரப்பி வந்த 104 யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளது.
மேலும் 45 வீடியோ காட்சிகள்,4 முகநூல் பக்கங்கள்,3 இன்ஸ்ட்டாகிராம் கணக்குகள்,5 டுவிட்டர் கணக்குகள் மற்றும் 6 வலைத்தளங்கள் ஆகியவை முடக்கப்பட்டுள்ளது.மத்திய தகவல் ஆணையத்தில் கடந்த 15 ஆம் தேதி வரை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பதியப்பட்ட 22,238 புகார்கள் மற்றும் இரண்டு மேல் முறையீடு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றது.
மத்திய அரசின் சட்டத்துறை அமைச்சர் கிரண் ரஜிஜீ கூறுகையில் பெயரிடப்படாத அரசியல் நன்கொடை தொகையை ரூ20000 இருந்து ரூ 2,000 ஆக குறைக்கவ வேண்டும்.மேலும் ரொக்க நன்கொடைகளை 20 சதவீதம் அல்லது ரூ 20 கோடியாக குறைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் பரிசீலனை செய்யப்பட்டுள்ளது.