ஆளும் கட்சிக்கு எதிராக 106 பேர்.. அனல் பறக்கும் ஈரோடு தேர்தல் களம்!! எடப்பாடியின் பக்கா மூவ்!!

0
168
ஆளும் கட்சிக்கு எதிராக 106 பேர்.. அனல் பறக்கும் ஈரோடு தேர்தல் களம்!! எடப்பாடியின் பக்கா மூவ்!!

ஆளும் கட்சிக்கு எதிராக 106 பேர்.. அனல் பறக்கும் ஈரோடு தேர்தல் களம்!! எடப்பாடியின் பக்கா மூவ்!!

ஈரோடு மாவட்டத்தில் இடைத்தேர்தல் ஆனது மார்ச் மாதத்தில் நடைபெற உள்ள நிலையில் ஒவ்வொரு கட்சிகளும் கூட்டணி கட்சிகளை ஆதரிப்பது என அடுத்தடுத்த பல செயல்களை நடத்தி வரும் வேளையில் தற்பொழுது அதிமுக இரண்டு அணிகளாக இருக்கும் பட்சத்தில் எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.

இதனை சாதகமாக வைத்து ஆளும் கட்சி தனது கூட்டணி கட்சியுடன் கைகோர்த்து தேர்தலை எதிர்கொள்ள பல நவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது.ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி உடன் இணைய தயாராக இருந்தாலும் அதற்கு ஒருபோதும் எடப்பாடி அவர்கள் இடம் கொடுப்பதில்லை என்பது திட்டவட்டமாக தெரிந்ததையடுத்து இருவரும் தனித்தனியாக வேட்பாளர்களை நிற்க வைக்க தயாராக உள்ளனர்.

இதில் இருவரும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே அதிமுக இரட்டை இலை சின்னத்தில் நிற்க முடியும்.இல்லையென்றால் அதிமுக சின்னம் முடக்கப்படும்.எனது உடம்பில் உயிர் இருக்கும் வரை சின்னத்தை முடக்க ஒருபோதும் விடமாட்டேன் என்று சசிகலா ஓர் பக்கம் கூறி வருகிறார்.ஆனால் இபிஎஸ் எதற்கும் செவிசாய்ப்பதாக தெரியவில்லை.

அந்தவகையில் ஓபிஎஸ், எடப்பாடி முதலில் வேட்பாளரை நிற்கவைக்கட்டும் என கூறி சற்று பின்வாங்கி மௌனம் காத்து வருகிறார். அந்த வகையில் இன்று எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் 106 பேர் கொண்ட அதிமுக தேர்தல் பணிக்குழுவை அறிவித்துள்ளது.அதுமட்டுமின்றி  இந்த 16 பேர் கொண்ட தேர்தல் பணிக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை தலைமை வகிக்கும் படி கூறியுள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் 106 பேர் கொண்ட அதிமுக தேர்தல் பணி குழுவை அறிவித்திருப்பதால் அடுத்த கட்டமாக ஓபிஎஸ் தரப்பில் இருந்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.