Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த ஆண்டு 106 சதவீதம் மழை பெய்யும்! இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்! 

106-percent-rain-this-year-india-meteorological-department-information

106-percent-rain-this-year-india-meteorological-department-information

இந்த ஆண்டு 106 சதவீதம் மழை பெய்யும்! இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!
இந்தியாவில் வழக்கத்தை விட இந்த ஆண்டு பருவமழையானது 106 சதவீதம் பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே  இருக்கின்றது. வழக்கமாக கோடை காலத்தில் மட்டும் தான் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் தற்பொழுது கோடை காலம் தொடங்குவதற்கு முன்னரே வெயில் அதிகமாக இருக்கின்றது. தமிழகத்தில் பல பகுதிகளில் வெயில் 100 டிகிரியை தாண்டி இருக்கின்றது.
இந்தியாவில் மகாராஷ்டிரா, மும்பை ஆகிய பகுதிகள் கடும் வெயிலால் அவதிப்பட்டு வருகின்றது. மேலும் தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்களிலும் வெயில் மக்களை வாட்டி வதைக்கின்றது. இந்நிலையில் மக்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்தியை  இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
அதாவது இந்தியாவில் வழக்கத்தை விட இந்த ஆண்டு பருவமழையானது சற்று அதிகமாக பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. ஜூன் 5ம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை இந்தியாவில் பருவ மழையின் 106 சதவீதம் பெய்யக்கூடும் என்றும் மேலும் ஜூன் 8ம் தேதிக்குள் மழை பெய்யத் தொடங்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தியா முழுவதும் வழக்கத்தை விட அதிகமாக பருவமழை பெய்ய வாய்ப்பு இருந்தாலும் இந்தியாவின் இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் ஆகிய பகுதிகளில் வழக்கத்தை விட குறைவாகவே மழை பெய்யும் என்றும் தகவல் வெளியிட்டுள்ளது.
பருவமழை தொடங்கும் காலத்தில் எல் நினோ காலநிலையானது வலுவிழக்கும். அதே போல ஏற்கனவே வலுவிழந்திருந்த எல் நினோ காலநிலை பழம் பெற்று வளர்ச்சி பெறும். இந்த காலநிலை மாற்றம் பருவமழை பெய்வதற்கு வழி வகுக்கும். இந்த காலநிலை மாற்றமானது சராசரியை விட அதிகமாக பருவமழை பெய்வதற்கு உதவியாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த 22 எல் நினோ ஆண்டுகளில் இந்தியாவில் வழக்கத்தை விட அதிகமாகவோ அல்லது சராசரியான அளவோ மழை பெய்துள்ளது. 1974 மற்றும் 2020 வரையிலான ஆண்டுகளில் மட்டுமே இந்த கணிப்பு பொய்த்து சராசரி அளவுக்கும் விட குறைவாகவே மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
Exit mobile version