Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

10 மற்றும் 12 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள்!! நாளை வெளியாகிறது!!

10th and 12th General Exam Results!! Out tomorrow!!

10th and 12th General Exam Results!! Out tomorrow!!

10 மற்றும் 12 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள்!! நாளை வெளியாகிறது!!

மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (CBSE) 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது. இந்த ஆண்டு மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் 10ம் வகுப்பு தேர்வுகள் பிப்ரவரி 15ம் தேதி தொடங்கி மார்ச் 21ம் தேதி முடிவடைந்தது. அதே போல்  12ம் வகுப்பு தேர்வுகள்  15ம் தேதி தொடக்கி ஏப்ரல்  5ம் தேதி முடிவடைந்தது.

இந்நிலையில் இந்த 10 மற்றும்  12ம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகள் எப்பொழுது வெளியாகும், இரண்டு வகுப்பிற்கான முடிவுகளும் ஒரே நாளில் வெளியிடப்படுமா என எதுவும் சரியாக தெரியாமல் இருந்தது. தற்போது சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை www.cbse.nic.in, www.cbseresults.nic.in, www.cbseresults.gov.in மற்றும் www.cbse.gov.in இந்த அதிகாராபூர்வ இணையதளங்களில் நாளை தெரிந்து கொள்ளலாம். தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள இந்த இணையதளங்களுக்குள் சென்று, ரோல் எண், பள்ளி எண், பிறந்த தேதி மற்றும் அட்மிட் கார்ட் ஐ.டி. ஆகியவற்றை பதிவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Exit mobile version