குமரியில் பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை!! ஆசிரியர் கைது!!
தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களாகவே பள்ளி மாணவிகளிடம் ஆசிரியர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வருவது தொடர்கதையாகவே உள்ளது. ஆசிரியர்களின் இந்த தொல்லையால் மாணவிகள் பெரிதும் பாதிக்கப் படுவதுண்டு.
இதனை தடுப்பதற்கு அரசு பல நடவடிக்கையை மேற்கொண்டாலும் முற்றிலும் தடுப்பதற்கு காண வழிமுறைகள் இன்னும் மேற்கொள்ள படாமல் இருப்பது வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
அரசாங்கம் என்ன தான் மாணவிகளுக்கு பல விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தாலும், அங்கொன்றும் இங்கொன்றுமாக பாலியல் அத்து மீறல்கள் நடைபெற்றுக் கொண்டுதான் உள்ளன. இந்நிலையில் கடந்த ஆறாம் தேதி தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொது தேர்வு தொடங்கியது.
இதில் குமரி மாவட்டம் தக்கலை அருகே அரசு உதவி பெறும் மேல்நிலை பள்ளியில் வேலவன் என்பவர் தேர்வு அறை கண்காணிப்பாளராக செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில் அங்குள்ள அறை ஒன்றில் தேர்வு எழுதிக்கொண்டிருந்த மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதனை அந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்ததை தொடர்ந்து, அவர்கள் உடனே இது குறித்து பள்ளி நிர்வாகம் மற்றும் காவல் துறைக்கு புகார் செய்தனர்.
மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் ஆசிரியர் வேலவன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் நேற்று அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
பள்ளி மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஆசிரியர் கைது விவகாரம் அப்பகுதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.