செல்போன் அதிக நேரம் பார்த்ததால் பத்தாம் வகுப்பு மாணவி விபரீத முடிவு?போலீசார் விசாரணை?..
ஆத்தூர் அருகே உள்ள துலுக்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவிக்குமார்.இவர் ஒரு லாரி பட்டறை மெக்கானிக் ஆவார்.இவர் கர்நாடக மாநிலத்தில் அங்கேயே தங்கி வேலை செய்து வருகிறார்.இவருடைய மனைவி பரிமளா.இவர்கூலி வேலைக்கு சென்று வருவார்.இவருடைய ஒரே மகள் ஹரிணிஸ்ரீ.
இவருடைய வயது பதினைந்து.இவர் அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.இவர் கடந்த வாரம் அன்று செல்போனில் கேம் விளையாடி கொண்டிருந்தார்.அவர் அதிக நேரமாக செல்போன் பயன் படுத்தியதாக கூறப்படுகிறது.இதை அவரது தாயார் கடுமையாக எச்சரித்துள்ளார்.
இதனால் கோபமடைந்த ஹரிணி ஸ்ரீ அழுதுகொண்டே அறைக்கு சென்றார்.அப்போது அருகில் இறந்த சேலையை எடுத்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.மகளின் அழுகை சத்தம் திடிரென்று நின்றதும் அதிர்ச்சி அடைந்த பரிமளா கத்தி சத்தம் போட்டதால் அவரது குடும்பத்தினர் விரைந்து வந்து ஹரிணிஸ்ரீயை மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கிருந்த மருத்துவர்கள் ஹரிணிஸ்ரீயின் உடலை பரிசோதனை செய்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு மேல் சிகிச்சை பெற்று வந்த ஹரிணிஸ்ரீ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இந்த சம்பவம் குறித்து ஆத்தூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செல்போன் அதிக நேரம் பயன்படுத்தக் கூடாது என தன் தாய் கூறியதால் சிறுமி எடுத்த விபரீத முடிவு.இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.