11 பிரச்சனைகளுக்கு மருந்தாகும் செவ்விளநீர்!

0
518

இளஞ்சிவப்பு நிறமுடைய இளநீரே செவ்விளநீர் என்பர் . இயல்பாக கிடைக்கும் பச்சை நிறமுடைய இளநீர்களை விட சுவை அதிகமாக இருக்கும். பச்சை இளநீர் கிடைக்கும் அளவிற்க்கு செவ்விளநீர் கிடைப்பதில்லை. ஆனால் எண்ணற்ற சக்திகளை உள்ளடக்கியது இந்த செவ்விளநீர்.

குடல் புழு

காலையில் வெறும் வயிற்றில் குழந்தைகள் வாரம் இரண்டு முறை செவ்விளநீர் குடிப்பதால் குடல் பகுதியில் காணப்படும் குடல் புழுக்களை அழித்து மேலும் உண்டாவதை தடுக்கிறது.

உயர் இரத்த

உயர் இரத்த அழுத்தத்தை குறைத்து கட்டுக்குள் வைக்க உதவும்

சிறு நீரக பிரச்சனை

உடல் சூட்டை குறைக்கும், ஆண்களுக்கு விசேமானது, ஆண், பெண் சிறு நீரக தொற்றை கட்டுபடுத்தும். சிறு நீரக பாதை பிரச்சனைகளை நீக்கும்.

ஜீரண கோளாறு

செவ்விளநீர் அருந்துவதால் இரைப்பை, சிறு குடல், பெருங்குடல் சார்ந்த நோய்களை கட்டுபடுத்தி ஜீரண சக்தியையும், குடல் சத்துக்களை உறிஞ்சும் தன்மையையும் அதிகப்படுத்தும்

முடி வளர

செவ்விளநிர் தேங்காயில் இருந்து எடுக்கப்பட்ட கலப்படம் இல்லாத எண்ணெய் தலை முடி உதிர்வதை தடுத்து முடி வளர்வதற்க்கு உறுதுணை செய்கின்றது

மூலிகை தைலம் 

செவ்விளநிர் எண்ணெய்யில் தலை முடிக்கு தேவையான மூலிகை தலைம் தயரிக்க பயன்படுத்தலாம்.

தோல் மென்மையாக

செவ்விளநிர் அருந்துவதால் தோல் மென்மையடைந்து புது பொழிவு உண்டாக்கும். முகத்தில் எண்ணெய் பிசுபிசுப்பை நீக்கி, தோலுக்கு தேவையான பசைத் தன்மையுடன் வைக்க உதவுகிறது.

தோல் சார்ந்த நோய்கள்

செவ்விளநீர் பூஞ்சைகள், வைரஸ் போன்றவற்றால் உண்டாகும் தோல் சார்ந்த நோய்கள் வராமல் தடுக்கும் மருத்துவ தன்மை உள்ளது.

முதல் உதவி பாணம்

நோயினால் அதிகம் பாதிக்கப்பட்டோருக்கு மிகச்சிறந்த முதல் உதவி பாணம்.

நீர்சத்து குறைபாடு

செவ்விளநிர் இளநீர் குழந்தைகள் அருந்துவதால் குழந்தைகளுக்கு ஏற்படும் நீர்சத்து குறைபாடு, மலக்கட்டு தீரும்.

பேதி

அனுபவ ரீதியாக மருத்துவர்கள் அதிபேதி உண்டானவர்களுக்கு செவ்விளநீரை பரிந்துரை செய்கின்றனர். இதனால் பேதி கட்டுப்படும் பேதியால் உண்டான கலைப்பு நீங்கும்.