ஆக்சிஜன் பற்றா குறையால் மேலும் 11 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு!! பரிதவிக்கும் உறவினர்கள்!!
இந்தியாவில் தொடர்ந்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியா முழுவதும் கொரோனா நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனிலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக பலர் பரிதாபமாக உயிரிழக்கும் சம்பவம் அங்காங்கே தொடந்து கொண்டு தான் உள்ளது. கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் பல நாடுகாளில் முழு ஊடங்கு பிறப்பிக்கபட்டு வருகின்றது.
இதைத் தொடர்ந்து நேற்று அதிகாலை 4 மணி முதல் தொடங்கிய ஊரடங்கு இன்னும் 14 நாட்கள் அதாவது மே 24 ஆம் தேதி அதிகாளை 4 மணி வரை நீடிக்கும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து தமிழகம் முழுதும் பல கடுமையான கட்டுப்பாடுகளை மேற்கொண்டு ஊரடங்கை பின்பற்றி வருகிறது.
இதைத் தொடர்ந்து ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள ரூயா மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக 11 கொரோனா நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். இது குறித்து ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்கள் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளார். மேலும் ஆக்சிஜன் ஏற்றி வந்த டேங்கர் லாரிகள் 45 நிமிடம் லேட்டாக வந்ததால் தான் இந்த உயிரிழப்புகள் ஏற்பட காரணம் எனவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதன் இடையே சம்பவ இடத்திற்க்குச் சென்று ஆய்வு செய்த சித்தூர் மாவட்ட ஆட்சியர் ஹரிநாராயணன் செய்தியாளர்களைச் சந்தித்து, மருத்துவர்கள் மிகவும் விழிப்புணர்வுடன் செயல்பட்டதால் தான் பெரும் உயிரிழப்புகளை தவிர்க்கப்பட்டு உள்ளது. எனினும் 11 கொரோனா நோயாளிகள் உயிரிழந்த நிகழ்வு மிகவும் சோகத்தை ஏற்படுத்துகிறது என கூறினார்.
மேலும் ஆந்திரா முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்களின் உத்தரவின் படி உயிரிழந்த 11 கொரோனா நோயாளிகள் குறித்து விரிவான உயர்மட்ட விசாரணை நடத்தப்பட்டு வருகிறது, எனவும் கூறியுள்ளார்.