ஆந்திராவின் விஜயவாடாவில் கொரோனா தனிமைப்படுத்துதல் மையத்தில் ஏற்பட்ட தீவிபத்தால் 11 பேர் பலியாகிய சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவில் விஜயவாடாவில் உள்ள சொர்ணா பேலஸ் எனும் நட்சத்திர ஹோட்டல் தற்காலிக கொரோனா தனிமைப்படுத்துதல் மையமாக செயல்பட்டு வந்தது. ஆந்திரா மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகமாக உள்ளதாலும், மேலும் மருத்துவமனைகளிலும் இடமில்லாததாலும் இந்த ஹோட்டலை தற்காலிகமாக கொரோனா தனிமைப்படுத்துதல் மையமாக மாற்றினர்.
இந்த தீவிபத்து சம்பவம் குறித்து அறிந்த ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அதிர்ச்சி அடைந்தாக தெரிவித்துள்ளார். பின்னர் தீயணைப்பு துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு அவர் மீட்பு பணிகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார். மேலும் மீட்பு பணிகளை துரிதமாக மேற்கொள்ளவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் ஏற்பட்ட இந்த தீவிபத்தில் இறந்தோருக்கு பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.