Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மத கல்வி கற்க விரும்பமில்லை.. 11 வயது மாணவன் செய்த அதிர்ச்சி செயல்.. ஹரியானாவில் நடந்த கொடூர சம்பவம்..!

மதப்பள்ளியில் சகமாணவனை சிறுவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்லாமிய மதத்தை போதிக்கும் மதராசா என்னும் மதப்பள்ளி ஹரியானா மாநிலம், நுஹ் மாவட்டம் ஷா சவுஹா கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. இதில், அந்த பகுதியை சேர்ந்த மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். அந்த பள்ளியில் படித்து வந்த சமீர் என்ற 11 வயது சிறுவன் பள்ளி முடிந்து நீண்ட நேரமாகியும் வீடு திரும்ப வில்லை என கூறப்படுகிறது. மகன் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த அவர் பெற்றோர் அக்கம்பக்கதில் தேடியுள்ளனர். எங்கு தேடியும் அவர் கிடைக்காததால் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்த புகாரை அடுத்தும் மாணவனை தேடியுள்ளனர். இந்நிலையில், கடந்த 5ம் தேதி அந்த பள்ளியில் இருந்து சிறுவன் சடலமாக மீட்கப்பட்டான். அவனின் உடலை மீட்ட காவல்துறையினர் பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுவன் காணாமல் போன வழக்கை கொலை வழக்காக மாற்றிய காவல்துறையினர் சிறுவன் எதற்காக கொலை செய்யப்பட்டான்? கொலையாளி யார் என்பது குறித்து தீவிர விசாரணையில் ஈடுப்பட்டு வந்தனர். காவல்துறையினர் விசாரணையில் சிறுவனை கொலை செய்ததது அதே பள்ளியில் படித்து வந்த 11வயது மாணவன் என்பது தெரியவந்தது.

இதனை அறிந்து அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் மேற்கொண்ட விசாரணையில் , அந்த சிறுவனுக்கு மதகல்வி கற்க விருப்பம் இல்லை என கூறப்படுகிறது. ஆனால், அவனின் விரும்பமின்றி கல்வி கற்க அனுப்பியதாக தெரிகிறது. இதனால், ஆத்திரத்தில் இருந்த சிறுவன் அந்த பள்ளிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த எண்ணி உடன் பயிலும் சக மாணவனை கொலை செய்து பள்ளியில் புதைத்தது தெரியவந்தது. இந்த வாக்குமூலத்தை அடுத்து, சிறுவனை கைது செய்த காவல்துறையினர் அவனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version