ஜனாதிபதியாக பதவியேற்ற 24 மணி நேரத்தில் 110 பேர் என்கவுண்டர்

0
153

ஜனாதிபதியாக பதவியேற்ற 24 மணி நேரத்தில் 110 பேர் என்கவுண்டர்

நான் பதவிக்கு வந்தால் இந்த அயோக்கியர்கள் அத்தனை பேரையும் சுட்டுத் தள்ளுவேன் அவர்களின் பிணத்தை கடலில் தூக்கி எறிவேன்.ஆயிரம் பேராகட்டும்,பத்தாயிரம் பேராகட்டும் எனக்கு கவலை இல்லை”
என்று தேர்தலின் போது வெளிப்படையாகக் கூறி பல மடங்கு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று அதிபர் பதவிக்கு வந்த அடுத்த 24 மணிநேரத்தில் 110 போதை மருந்து விற்பனையாளர்கள் சுட்டுகொல்லப்பட்டனர்.

இதன் விளைவாக ஆயிரக்கணக்கான ரவுடிகளும்,போதைமருந்து வியாபாரிகளும் போலீஸ் மற்றும் ராணுவத்திடம் சரணடைகிறார்கள்.
வித்தியாசமான ஒரு தலைவர் பிலிப்பைன்ஸ் நாட்டின் புதிய ஜனாதிபதியாக ஜூலை 1 ஆம் தேதி பதவியேற்ற ரோட்ரிகோ டுடேர்தே.(Rodrigo Duterte)
“பொருளாதாரம் பற்றி எனக்கு தெரியாது.இந்த நாட்டின் அறிஞர்களும்,பொருளாதார நிபுணர்களும் அடங்கிய குழுவிடம் அந்த பொறுப்பை விட்டுவிடுவேன்.

என் பொறுப்பு லஞ்சம்,கொலை,கொள்ளை,போதைமருந்து விற்பனை ஆகியவற்றை அடியோடு ஒழித்து பெண்கள் சுதந்திராமாக நடமாடக்கூடிய ஒரு பத்திரமான நாட்டை உருவாக்குவதே.”
போதை மருந்தைஉற்பத்தி செய்பவர்கள்,விற்பனைசெய்பவர்கள்,பயன்படுத்துபவர்கள் அத்தனை பேருக்கும் நான் எமனாக இருப்பேன்
சட்டமன்றங்களோ,மனித உரிமை அமைப்புகளோ என்ன சொன்னாலும் அதை நான் பொருட்படுத்த போவதில்லை.
மக்கள் எனக்கு அளிக்கும் ஆறு ஆண்டு கால அவகாசத்தில் முதல் ஆறு மாதத்திலேயே, பிலிப்பைன்ஸ் நாட்டை உலகிலேயே அமைதியான பத்திரமான இடமாக்குவதே என் லட்சியம்.

அவரது இந்த வாக்குறுதிகளை ஏற்றுக் கொண்டு தான் பிலிப்பைன்ஸ் மக்கள் தங்கள் ஜனாதிபதியாக டுடேர்தேயை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.
இந்த டுடேர்தேயை அவரது மக்கள் எப்படி புரிந்து கொண்டார்கள்.??
கேட்கவே வித்தியாசமாக இருக்கும் அவரது பின்னணி நாம் அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று தான்.
71 வயதாகும் டுடேர்தே பிலிப்பைன்ஸில் நாட்டுப்புறத்தில்,எளிய குடும்பத்தில் பிறந்தவர்.வக்கீல் பட்டம் பெறும் அளவிற்கு படித்துவிட்டார்.

5 – 6 ஆண்டுகள் வெவ்வேறு தொழில்களில் ஈடுபட்டு பின்னர் அரசியலில் நுழைந்தவர்.தனது ஏரியாவான மின்டனாவோவில்,தாவோ என்கிற ஊரின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டுடேர்தே, 22 ஆண்டுகளுக்கு அவரது மக்களால் விரும்பி தேர்ந்தெடுக்கப்பட்டு மேயர் பதவியில் இருந்தார்.
பரபரப்பாக நிகழ்ந்த தேர்தலின்முடிவில் எதிர் வேட்பாளரான அன்றைய ஜனாதிபதியை விட இரண்டு மடங்கு ஓட்டு பெற்று வெற்றி பெற்றார்.

ஜூலை 1 பதவி ஏற்றார்.முதல் தகவல் 110 போதை மருந்து விற்பனையாளர்கள் சுட்டு கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான போதைமருந்து விற்பனையாளர்களும்,ரவுடிகளும்,முன்னாள் குற்றவாளிகளும் போலீசில் சரணடைந்தனர்.
இன்னமும் களையெடுப்பு முடியவில்லை கவலைப்படாமல் சுடுங்கள்.
நாட்டை சுத்தம் செய்யுங்கள்.உங்கள் செயலின் விளைவுகளுக்கு நான் பொறுப்பேற்கிறேன்,என்று காவல் படைக்கும்,ராணுவத்திற்கும் உறுதி அளித்திருக்கிறார்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்