வியாட்நாமில் கண்டுபிடிக்கப்பட்ட 1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவலிங்கம்!

0
121

வியாட்நாமின் குவாங் நாம் பகுதியில் ஏராளமான சிவலாயங்கள் இருந்து வந்தன. 1969ம் ஆண்டு அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலால் அங்கிருந்த பெரும்பான்மையான கோவில்களில் சிதைந்து போனது.

2011ம் ஆண்டு இந்திய அரசு சிதைந்த கோவில்களை சீரமைக்க உதவ முன் வந்தது. இதனையடுத்து இந்திய தொல்லியல் துறை சார்பில் குவாங் நாம் பகுதியில் உள்ள சிவலாயங்களில் மறுசீரமைப்பு பணி துவங்கியது.

மறுசீரமைப்பு பணி நடைபெற்று வந்த போது கடந்த வாரம் 1100 ஆண்டுக்கால பழமையான ஒற்றைக்கல்லால் வடிவமைக்கப்பட் சிவலிங்கம் ஒன்று கண்டறியப்பட்டது.

இதனை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் இந்தியா – வியாட்நாமிற்கு இடையே உள்ள நாகரீக தொடர்பை இந்த கண்டுபிடிப்பு மீண்டும் உறுதி செய்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆஸ்ட்ரோனேசியாவின் சாம்ஸ் இனத்தவர் ஆட்சி காலத்தில் மை சன் என்று அழைக்கப்படும் இந்த கோவில் கட்டுமானங்கள் 4ம் நூற்றாண்டு மற்றும் 14ம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டது என்று கூறப்படுகிறது.