Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

9-ஆம் வகுப்பு மாணவியை சில்மிஷம் செய்த இரு வாலிபர்கள்!.. ஓடும் ஆட்டோவில் இருந்து குதித்த சிறுமி?

Two boys who mocked the 9th class student!.. The girl who jumped from the running auto?

Two boys who mocked the 9th class student!.. The girl who jumped from the running auto?

9-ஆம் வகுப்பு மாணவியை சில்மிஷம் செய்த இரு வாலிபர்கள்!.. ஓடும் ஆட்டோவில் இருந்து குதித்த சிறுமி?

சென்னை புதுவண்ணாரப்பேட்டை சேர்ந்தவர் இந்த  14 வயது சிறுமி. இவர் தண்டையார்பேட்டையிலுள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று மாலை மாணவி பள்ளி வேலை முடித்து ஷேர் ஆட்டோவில் வீட்டுக்கு திரும்பி உள்ளார்.

அந்த ஆட்டோவில் ஏற்கனவே 25 வயது மதிக்கத்தக்க இரண்டு வாலிபர்கள் பயணம் செய்திருந்தார்கள்.புதுவண்ணாரப்பேட்டையை நெருங்கும் போது வாலிபர்கள் இருவரும் மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி ஓடும் ஆட்டோவில் இருந்து  கீழே திடீரென குதித்தார்.

இதில் மாணவியின் மூக்கு,தாடை, இரண்டு கைகளிலும் பலத்த படுகாயம் ஏற்பட்டது. உடனே ஆட்டோவில் இருந்த மர்ம நபர்கள் தப்பி ஓடி விட்டனர். ஆட்டோ டிரைவர் சார்லஸ் மாணவியை அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

அங்கு மாணவி சிகிச்சை பெற்று வருகின்றார்.மர்ம நபர்கள் இரண்டு பேர் சில்மிஷத்தில் ஈடுபட்டதால் மாணவி ஓடும் ஆட்டோவில் இருந்து குதித்தாரா? அல்லது மாணவியை கடத்த முயற்சி செய்திருந்தார்களா என்ற பல கோணத்தில் ஆட்டோ டிரைவரிடம் புது வண்ணாரப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுமியின் இந்த செயலை கண்டு அவரது பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த இரண்டு மர்ம நபர்களையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Exit mobile version