முடி வெட்டுன காசு குடு ?காசு இல்லை! சவர கத்தியால் அதை அறுத்த சலூன் கடை முதலாளி!..ரத்தம் கொட்டியபடி வெளியே ஓடி வந்த நபர்?!.
காட்பாடி அருகே அக்ஷிலியம் கல்லூரி ரவுண்டான அருகே உள்ள தனியார் கட்டிடத்தில் ஆசாம மாநிலத்தை சேர்ந்த ஒருவர் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.இந்த சம்பவம் தொடர்பாக வேலூர் விருதம்பட்டு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் அபனி சரணியா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதனை தொடர்ந்து இந்த வலக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டது.முதல் கட்ட விசாரணையில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது அபனி சரணியா வெட்டப்பட்ட நாள் அன்று மாலை நான்கு மணிக்கு காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து வெளியில் நடந்து வந்தது தெரிந்தது.
பிறகு அங்குள்ள சலூன் கடையில் உள்ளே செல்வது பின்னர் நாற்பது நிமிடங்கள் கழித்து கழுத்தில் ரத்தம் சிந்த சிந்த வெளியில் ஓடி வருவது தெரிய வந்தது.அதே போல் பிரேத பரிசோதனையிலும் அந்த நபர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டார் அதனால் தான் கழுத்தில் அழமாக பதிந்து ரத்தம் வெளிவந்திருக்கும் என தெரிவித்தனர்.
சிசிடிவி காட்சிகளை பார்த்த போதும் மருத்துவர்கள் கூறும் தகவலை வைத்து பார்த்த போதும் சலூன் கடை உரிமையாளர் தன இந்த கொலையை செய்தார் என அவரை கைது செய்தனர்.பின் சலூன் கடைக்காரரை விசாரணை செய்த போது முடி திருத்தம் செய்ய என் கடைக்கு வந்தார்.நானும் முடி திருத்தம் செய்தேன் நான் அவரை காசு கேக்கவே! அவர் இல்லை என மறுத்தார்.
அப்படியே இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது ஒரு கட்டத்தில் கோபம் உச்சிக்கு சென்ற நிலையில் கையில் வைத்திருந்த சவர கத்தியால் அவரை கழுத்தை அறுத்து விட்டேன் என ஒப்புக்கொண்டார்.தத்துருவமாக செயல்பட்டு கொலையாளியை பிடித்த போலீசாருக்கு காவல் துறையின் அதிகாரியானா மாவட்ட எஸ்.பி.பாராட்டினார்.