Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு தேதி வெளியீடு..!

#image_title

11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு தேதி வெளியீடு..!

தமிழக அரசுக்கு இயங்கி வரும் பள்ளிகளில் மார்ச், ஏப்ரல் மாதத்தில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் இந்த 2024 ஆம் ஆண்டிற்கான பொதுத் தேர்வு அட்டவணையை கடந்த நவம்பரில் வெளியிட்டார்.

இந்நிலையில் 11 மற்றும் 12 ஆம் மாணவர்கள் பொதுத் தேர்விற்கு முன் எழுதக் கூடிய செய்முறை தேர்விற்கான தேதியை தேர்வுத் துறை இயக்குநரகம் தற்பொழுது வெளியிட்டு இருக்கின்றது.

அதன்படி, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு அடுத்த மாதம்(பிப்ரவரி) 19 ஆம் தேதி தொடங்கி 24 ஆம் தேதியில் முடிவடைகிறது.

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு பிப்ரவரி மாதம் 12 இல் தொடங்கி 17 இல் முடிய உள்ளது.

மேலும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு.. பொதுத் தேர்வு மார்ச் முதல் தேதியில் தொடங்கி அதே மாதத்தின் 22 ஆம் தேதியிலும்.. 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு.. பொதுத் தேர்வு மார்ச் 4 இல் தொடங்கி அதே மாதம் 24 இல் முடிவடைகிறது.

Exit mobile version