தொடங்கியது 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு! முடிவுகள் எப்பொழுது தெரியுமா?

0
213
11th class general examination started! When do you know the results?

தொடங்கியது 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு! முடிவுகள் எப்பொழுது தெரியுமா?

தற்போது தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு நடைபெற்று வருகிறது. தொற்று பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் பொது தேர்வு நடைபெறுவது கேள்விக்குறியாக இருந்தது. கடந்த 2 வருட காலமாக பொதுத்தேர்வு ஏதும் நடைபெறாததால் இந்த வருடமும் நடைபெறாது என்று கூறிவந்தனர். அவ்வாறு இருக்கையில் தற்பொழுது பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு நடைபெற்று வருகிறது. அத்தோடு 1முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வு நடைபெற்று வருகிறது.

தற்பொழுது கோடைக்காலம் ஆரம்பித்துவிட்டதால் மாணவர்களுக்கு கோடை விடுமுறை முன்கூட்டியே விடுவதாகவும் கூறியுள்ளனர்.அதுமட்டுமின்றி தேர்வு நடைபெறும் பொழுது மட்டும் மாணவர்கள் பள்ளிக்கு வந்தால் பொது,தேர்வு இல்லாத நாட்களில் வர தேவை இல்லை என கூறியுள்ளனர்.அதனை அடுத்து இன்று முதல் 11 ஆம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு தொடங்கியுள்ளது. பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று பல வதந்திகள் வெளிவந்தது. அதனால் கல்வித் துறை அமைச்சர் மாஸ்க் அணிவது கட்டாயமில்லை என்று தெளிவான ஒரு விளக்கத்தை கூறினார்.

இதேபோல புதுச்சேரியிலும் தற்பொழுது பதினொன்றாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு தொடங்கியுள்ளது. 11 ஆம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு முடிவுகள் ஜூலை 7-ஆம் தேதி வெளியிடப்படும் என தெரிவித்துள்ளனர். இந்த பதினொன்றாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு தமிழகத்தில் மட்டும் 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதி உள்ளனர். அதைப்போல புதுச்சேரியில் 15 ஆயிரத்து 545 மாணவர்கள் எழுத உள்ளனர். இன்று தமிழ் பாடத் தேர்வு நடக்கிறது. வரும் 12ஆம் தேதி ஆங்கிலப் பாட தேர்வு நடைபெற உள்ளது.