சற்று முன்: +2 தேர்வுகள் ரத்து! முதலமைச்சர் அறிவிப்பு!

0
142

மாணவர்களின் நலன் கருதி பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுகிறது என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

 

கொரோனா பெரும் தொற்று காரணமாக அனைத்து மக்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து பணிகளை சிறப்பாக செய்து வருகிறது தமிழக அரசு. பன்னிரெண்டாம் பொதுத் தேர்வுகள் குறித்து பல்வேறு தரப்பினரிடையே ஆலோசனை கேட்டு முடிவெடுத்துள்ளது.

 

ஒன்றிய அரசு மத்திய இடைநிலை வாரியம் சிபிஎஸ்சி தேர்வுகள் ஏற்கனவே இரத்து செய்துள்ளது. அதேபோல் மற்ற மாநிலங்களும் அவரவர்களின் மாநில பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்துள்ளனர்.

 

பொதுத் தேர்வுகளை நடத்துவது குறித்து மாணவர்கள், ஆசிரியர்கள், மாநில அரசு, மத்திய அரசு ,சுகாதாரம், பத்திரிக்கையாளர்கள், ஊடகவியலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கல்வியாளர்கள், அமைச்சர்கள், உளவியல் நிபுணர்கள், என அனைவரிடமும் அமைச்சரின் முன்னிலையில் கருத்துக்கள் ஆலோசிக்கப்பட்டது.

 

ஒரு தரப்பினர் இதை மேலும் நடத்துவது குறித்து ஆதரவாகவும், ஒரு தரப்பினர் மறுப்பு தெரிவித்த நிலையிலும், மாணவர்களின் மனநலம் பாதிக்கப் படாமல் இருக்க வேண்டும் என்பதில் அனைவரும் தெளிவாக உள்ளனர்.

 

கொரோனா வின் இரண்டாவது அலையே இன்னும் முடிவுக்கு வராத நிலையில் மூன்றாவது அலை வரும் என மருத்துவ ஆய்வாளர்கள் கூறி வருகிறார்கள். 18 வயதுக்கு மேல் உள்ள நபர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படும் என்ற நிலையில் , அதற்கும் வயது குறைவான மாணவர்களை ஒரே நேரத்தில் எப்படி தேர்வு எழுத அனுமதிப்பது. அது தொற்றை மேலும் அதிகமாகி விடும் என்று கூறுகின்றனர்.

 

12-ஆம் வகுப்பு தேர்வுகள் மட்டுமே உயர் கல்வியைப் பெறுவதற்கான ஒரு முன்னோடி என்று அறிந்தும், தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டால் மாணவர்களின் மன நலன் பாதிக்கும் என்பதால் மருத்துவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடையே வந்த கருத்துக்களின் ஆலோசனை படி இந்த ஆண்டு 12-ஆம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படுகிறது. மதிப்பெண்கள் வழங்குவது குறித்து தலைமை செயலாளர்கள், பள்ளி துணைவேந்தர்கள் ஆகியோருடன் குழு அமைக்கப்பட்டு முடிவெடுக்கப்படும்.

 

மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது என்பதை பற்றி அந்த குழு அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும். அந்த அறிக்கையை கொண்டுதான் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண்கள் வழங்கப்படும். அதை வைத்து மட்டுமே அனைத்து உயர் கல்வி நிறுவனங்களிலும் சேர்க்கை நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.

 

பெருந்தொற்று காரணமாக அகில இந்திய அளவில் நடத்தப்படும்’ நீட் ‘ போன்ற தேர்வுகளை நடத்துவது உகந்ததாக இந்தச் சூழ்நிலையில் இருக்காது என தமிழ்நாடு அரசு தெரிவிக்கிறது. இது குறித்து எந்த ஒரு செய்தியும் வெளிவராத நிலையில் ஸ்டாலின் அவர்கள் அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்யக்கோரி‌ பிரதமர் மோடி அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

கொரோனா காலத்தில் மாணவர்களின் உடல் நலம் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்ற நோக்கத்தில்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.