Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சீட்டு கட்டுப்போல் சரிந்து விழுந்த 12 மாடி கட்டிடம்! 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்க வாய்ப்பு

12 story building collapse

12 story building collapse

சீட்டு கட்டுப்போல் சரிந்து விழுந்த 12 மாடி கட்டிடம்! 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்க வாய்ப்பு

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மியாமி கடற்கரையின் அருகே 12 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு வளாகம்  அமைந்துள்ளது. அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் லத்தீன் அமெரிக்காவின் பராகுவே, கொலம்பியா, வெனிசுலா, அர்ஜெண்டினா, உருகுவே   உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் அதிகமாக தங்கி இருந்தனர் என்று கூறப்படுகிறது.1981 களில் கட்டப்பட்ட இந்த கட்டிடத்தின் பராமரிப்பு  பணியானது தற்போது நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் தான் இந்த 12 மாடி அடுக்குமாடி கட்டிடமானது இன்று அதிகாலை 1 மனி அள்வில் சீட்டுக்கட்டு  போல் சரிந்து விழுந்ததுள்ளது.  இதில் அந்த கட்டிடத்தின் ஒரு பகுதி முழுவதுமே முற்றிலுமாக சரிந்துள்ளது. அதே போல குடியிருப்பின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள சுமார் 55 குடியிருப்புகளும் இடிந்து சரிந்துள்ளது.இந்த கோர விபத்தில் அங்கு வசித்து வந்த நூற்றுக்கும் மேற்பட்டார் சிக்கி உள்ளதால் மீட்பு பணிகள் துரிதப்பட்டுள்ளன.

அமெரிக்காவில் சீட்டு கட்டு போல் சரிந்த 12 மாடி கட்டிடம் ; 99 பேர் கதி என்ன...?

அடுக்குமாடி கட்டிடம் சரிந்து விழுந்த இந்த இடிபாடுகளில் சிக்கிய 12 வயது சிறுவன் உள்பட 50 க்கும் மேற்பட்ட பலர் மீட்கப்பட்டுள்ளனர். இதுமட்டுமல்லாமல் இடிபாடுகளுக்குள் சிக்கி 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.  ஆனால் தற்போது வரை உயிரிழப்பு எண்ணிக்கை குறித்து அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. இந்த கோர விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர். அவர்களில் பலரது நிலைமையானது தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது

மேலும் இந்த சம்பவம் நடந்தபோது அந்த அடுக்குமாடி கட்டிடத்தில் எத்தனை பேர் இருந்தார்கள் என்பது பற்றி தெளிவாகத் தெரியவில்லை. இதனால் அந்த பகுதியில் காணாமல் போனவர்களை பற்றி எதுவும் உறுதியாக தெரிவிக்க முடியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அந்த அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுவதற்கு என்ன காரணம் என்று அதிகாரிகள் இன்னும் தீர்மானிக்கவில்லை, மேலும் இந்த சம்பவம் குறித்து மியாமி-டேட் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

Exit mobile version