Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இல்லத்தரசிகள் கிச்சனில் சிக்கனத்தை கடைபிடித்து பணம் சேமிக்க 12 சூப்பர் டிப்ஸ்!!

#image_title

இல்லத்தரசிகள் கிச்சனில் சிக்கனத்தை கடைபிடித்து பணம் சேமிக்க 12 சூப்பர் டிப்ஸ்!!

டிப் 1:

கணவர் மளிகை பொருள் வாங்க தரும் பணத்தில் குறைந்தபட்சம் 200 ரூபாயை எடுத்து சேமித்து விட்டு மீதம் இருக்கும் தொகைக்கு மளிகை சாமான் வாங்க முயற்சி செய்யுங்கள். இவ்வாறு செய்யும் பொழுது சிறு துளி பெரு வெள்ளம் என்பது போல் பணம் சேரும்.

டிப் 2:

நம் அனைவரின் வீட்டிலும் பாக்கட் பால் வாங்கும் வழக்கம் இருக்கும். இப்படி தினமும் வாங்கும் பாக்கட் பாலில் கவர்கள் மற்றும் தேங்காய் சிரட்டை, செய்தித்தாள் உள்ளிட்டவற்றை சேமித்து எடைக்கு கொடுத்து பணமாக பெறலாம்.

டிப் 3:

பாத்திரம் கழுவ, கிட்சன் டைல்ஸ் கழுவ கடையில் இருந்து ஸ்க்ரப்பர் வாங்காமல் வீட்டில் உள்ள தேங்காய் நாருகளை தனியாக ஒரு பையில் சேமித்து வைத்து அவற்றை பாத்திரம் கழுவவும், கிட்சன் டைல்ஸ் கழுவவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

டிப் 4:

இட்லி, தோசைக்கு மாவு அரைக்க கடையில் இருந்து இட்லி அரிசி வாங்காமல் ரேசன் கடையில் இலவசமாக வழங்கப்படும் அரிசியை பயன்படுத்தி மாவு அரைக்கலாம். ரேசன் அரிசி மாவு வைத்து தயாரிக்கப்படும் இட்லி அதிக சுவை மற்றும் பஞ்சு போன்று இருக்கும். இட்லி அரசி ரேட் அதிகம். ரேசனில் கொடுக்கப்படும் அரசியை பயன்படுத்தும் பொழுது காசு மிச்சம் ஆகிறது.

டிப் 5:

ரேசனில் கல் உப்பின் விலை ஒரு கிலோ 8 ரூபாய் தான். ஆனால் கடைகளில் கல் உப்பின் விலை 20 ரூபாய்க்கும் மேல் இருக்கிறது. எனவே ரேசன் கல் வாங்கி பயன்படுவதால் பணம் மிச்சமாகிறது. அதேபோல் துவரம் பருப்பு, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்டவைகள் ரேசனில் குறைந்த விலைக்கு கிடைக்குறது. இந்த பொருட்களை வாங்கி பயன்படுத்துங்கள். இதனால் கடையில் இந்த பொருட்களை வாங்காமல் தவிர்த்து பணத்தை மிச்சப்படுத்த முடியும்.

டிப் 6:

தயிர் பாக்கட் வாங்குவதை விட உரை தயிர் வாங்கி அதில் பாலை சேர்த்து வீட்டிலேயே தயிர் செய்யலாம். இதன் மூலம் பணமும் மிச்சமாகும், உடல் ஆரோக்யமாகவும் இருக்கும்.

டிப் 7:

இட்லி மாவு தீர்ந்து விட்டால் கடையில் இட்லி தோசை போன்ற டிபன் ஐட்டம் வாங்குவதை விட இட்லி மாவு வாங்கி வீட்டிலேயே இட்லி அல்லது தோசை தயாரித்து கொள்ளலாம். இதனால் குறைந்த விலையில் அதிக தோசை, இட்லி கிடைக்கும். பணமும் மிச்சமாகும். அதேபோல் இட்லி பொடி கடையில் வாங்குவதை விட வீட்டிலேயே தயார் செய்வதால் நமக்கு பணம் மிச்சம் ஆகும்.

டிப் 8:

வீட்டிற்கு தேவையான பொருட்களை மொத்த விலை கடையில் வாங்குவதன் மூலம் விலையும் குறைவாக இருக்கும். பொருட்களின் குவான்டிட்டி அதிகமாக இருக்கும். இதன் மூலம் பணத்தை மிச்சப்படுத்த முடியும்.

டிப் 9:

நீங்கள் சமைக்கும் உணவு வகைககள் எளிதாக, சில நிமிடத்தில் சமைக்கும் உணவு வகைகளாக இருந்தால் கேஸ் குறைந்தளவு தான் தேவைப்படும். அதேபோல் சமைக்கும் பொழுது மீடியம் அல்லது லோ ஃப்லேமில் வைத்து சமையுங்கள். இவ்வாறு செய்வதால் கேஸ் நீண்ட நாடகளுக்கு வரும். இதன் மூலம் அடிக்கடி கேஸ் வாங்குவது தவிர்க்கப்பட்டு பணத்தை மிச்சப்படுத்த முடியும்.

டிப் 10:

மஞ்சள் தூள், மிளகாய் தூள், கறி மசால் உள்ளிட்டவைகளை கடையில் வாங்குவதை விட இந்த தூள்கள் செய்ய தேவையான பொருட்களை மொத்த விலை கடையில் வாங்கி வீட்டு முறையில் தயாரித்து 5 முதல் 6 மாதங்கள் வரை வைத்து பயன்படுத்தலாம்.

டிப் 11:

காய்கறிகளை உழவர் சந்தை காய்கறி மார்க்கெட்டில் வாங்குவதை வழக்கமாக்கி கொள்ளுங்கள். அங்கு தான் விலை மிகவும் குறைவாக இருக்கும்.

டிப் 12:

இறைச்சி உணவுகளை மாதத்தில் 2 முறை அதாவது ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் என்று எடுப்பதன் மூலம் பணத்தை மிச்சப்படுத்த முடியும். அப்படி இல்லையென்றால் ஒரு வாரம் சிக்கன், ஒரு வாரம் முட்டை, ஒரு வாரம் கருவாடு, ஒரு வாரம் மீன் என்று வாங்கி சமைக்கலாம். இவ்வாறு செய்வதன் மூலம் வார வாரம் இறைச்சி வாங்குவது தவிர்க்கப்பட்டு பணம் மிச்சமாகும்.

Exit mobile version