கர்நாடக மாநிலத்தில் உள்ள குடகு மலையிலிருந்து உருவாகும் காவேரி ஆறு தமிழகத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது.
அப்படி முக்கிய நீராதாரமாக விளங்கி வரக்கூடிய காவிரி நதியில் இருந்து கர்நாடக மாநிலம் தமிழகத்திற்கு நீர் திறந்து விடுவதற்கு தொடர்ந்து மறுத்து வந்தது. அந்த விதத்தில் முதல்முறையாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டு அந்த வாரியத்தின் தீர்ப்பின் அடிப்படையில் கடந்த 2017ம் ஆண்டு முதல் தமிழகத்திற்கு நீர் திறந்து விடுவதற்கு கர்நாடக அரசு முன்வந்தது.
அந்த வகையில், காவிரி டெல்டா பகுதியான சேலம் மாவட்டம் மேட்டூர் கிராமத்தில் இருக்கும் மேட்டூர் அணை டெல்டா பகுதி விவசாயிகளுக்கு மற்றுமொரு நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது.
இந்த சூழ்நிலையில், கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை நீடித்து வருகின்றது. அதோடு கர்நாடக மாநிலத்தில் இருக்கக்கூடிய கபினி மற்றும் கிருஷ்ண ராஜ சாகர் அணைகள் தொடரும் கனமழையால் நிரம்பியிருக்கின்றன. இதனால் மேட்டூர் அணைக்கு சென்ற ஒரு வார காலமாக நீர் வரத்து மெல்ல, மெல்ல அதிகரித்து வந்தது.
இந்த சூழ்நிலையில், தொடர் மழையின் காரணமாக, மேட்டூர் அணையின் நீர்மட்டம் சென்ற 9ஆம் தேதி காலை 5 மணி அளவில் 119 அடியை எட்டியது, இதனை அடுத்து அணையின் முழு கொள்ளளவான 120 அடியை எட்டுவதற்கு முன்பாகவே அணையிலிருந்து தண்ணீரை திறந்துவிட அதிகாரிகள் முடிவெடுத்தார்கள். அதன் அடிப்படையில், முதல் கட்டமாக 20 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது.
இப்படியான சூழ்நிலையில், நேற்று மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 18 ஆயிரத்து 150 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது, ஆகவே இன்றைய நிலவரத்தின் அடிப்படையில் மேட்டூர் அணையில் நீர் வெளியேற்றம் 12 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டு இருக்கிறது. அதேநேரம் அணைக்கான நீர்வரத்து 19 ஆயிரத்து 146 கன அடியிலிருந்து 14 ஆயிரத்து 812 கன அடியாக குறைந்திருக்கிறது.
அணையின் நீர்மட்டம் தொடர்ந்து நான்காவது நாளாக 119 உடனடியாகவே நீடித்து வருகிறது, அதோடு மேட்டூர் அணையில் தற்சமயம் 91.88 டிஎம்சி தண்ணீர் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.