Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

46 வயது பெண் சாமியாரை கற்பழித்த வழக்கில் 12 வயது சிறுவன் கைது !!

 

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆசிரமம் ஒன்றில் 46 வயதுப் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 12 வயது சிறுவன் கைது செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலம் கோடா மாவட்டத்தில் அமைந்துள்ள ராணிதி என்ற ஆசிரமத்தில் நுழைந்த 4 நபர்,அங்கிருந்த 46 வயது பெண் சாமியார் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதில் இரண்டு பேரை கைது செய்து விசாரித்து, தனது குற்றங்களையும் ஒப்புக் கொண்டனர்.

இந்நிலையில் அந்த வழக்கில் தற்போது 12 வயது சிறுவனை, போலீசார் கைது செய்துள்ளனர்.ஏற்கனவே கைது செய்யப்பட்ட இருவர் வாக்குமூலத்தின் அடிப்படையில் அச்சிறுவனை கைது செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த சிறுவன் ஆசிரமத்திற்குள் நுழைய வழித்தடங்களை கூறியதாகவும், அந்த சிறுவன் துப்பாக்கி முனையில் மிரட்டி கொண்ட போது மற்றவர்கள் பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார்கள் என்றும் அந்த வழக்கில் தெரியவந்துள்ளது.

தற்பொழுது கைதுசெய்யப்பட்ட மூன்றாவது குற்றவாளியான அச்சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர்.மேலும் நான்காவது நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் குற்றம் நடந்த இடத்திலிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரியை தடயவியல் பரிசோதனைக்காக காவல்துறையினர் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

Exit mobile version