சினிமா துறையில் இருந்து 12th fail பட நடிகர் ஓய்வு!! பாராட்டிய பிரதமர்!!

0
95

என் ஒன்பது மாத குழந்தையின் பாதுகாப்பு கருதியும் என் குடும்பத்தினுடைய உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்றும் கூறி சினிமா துறையில் இருந்து தன்னுடைய ஓய்வை அறிவித்திருக்கிறார் நடிகர் விக்ராந்த் மாஸ்ஸி. இது ரசிகர்களிடையே மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

2013ஆம் ஆண்டு வெளியான ‘lootera’ திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் பாலிவுட் நடிகர் விக்ராந்த் மாஸ்ஸி. மிகவும் பிரபலமான ‘மிர்சாபூர்’ வெப் சீரிஸில் விக்ராந்த் மாஸ்ஸி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

 

இதனை தொடர்ந்து விக்ராந்த் மாஸ்ஸி, ராஷி கண்ணா உள்ளிட்டோர் நடித்த சபர்மதி ரிப்போர்ட் திரைப்படம் வெளியானது. இத்திரைப்படத்திற்காக பல அரசியல் தலைவர்களும் தங்களுடைய பாராட்டு கலை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இவ்வாறு ஒரு பக்கம் பாராட்டுக்கள் வர மற்றொரு பக்கம் விக்ராந்த் மாஸ்ஸி சினிமாவில் இருந்து விலகுவதாக தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்தார். சமூக வலைதள பக்கத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது :-

 

கடைசி சில ஆண்டுகள் எனது வாழ்வில் சிறப்பானதாக அமைந்தது. எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. ஒரு கணவர், தந்தை, மற்றும் மகனாக எனது வீட்டை கவனிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. வரும் 2025ஆம் ஆண்டு கடைசியாக ஒரு முறை நாம் திரைப்படங்களில் சந்திப்போம். கடைசி 2 படங்கள் மற்றும் பல வருடங்களின் நினைவுகளுடன் .. என மன வருத்தத்துடன் பதிவு செய்திருந்தார்.

 

சபர்மதி ரிப்போர்ட் படத்தில் நடித்ததை வைத்து விக்ராந்த் மாஸ்ஸி ஒரு கலைஞராக இல்லாமல் இந்து மதம் சார்புடையவராக செயல்படுவதாக சிலர் விமர்சிக்க ஆரம்பித்தனர். இதனால் தான் அவர் சினிமாவை விட்டு விலகும் முடிவை எடுத்ததாக சொல்கின்றனர்.

 

பேட்டியாளர்களை சந்தித்து இவர் பேசியிருப்பதாவது :-

 

சபர்மதி ரிப்போர்ட் திரைப்படத்தில் நடித்ததற்கு எனக்கு மிரட்டல்கள் வந்தன. இன்னும் பல மிரட்டல்கள் வர வாய்ப்பு இருக்கிறது. கலைஞர்களாக நாங்கள் அங்கு நடந்ததை சொல்லி இருக்கிறோம். எனக்கு 9 மாத குழந்தை இருக்கிறது. அந்த குழந்தையின் பாதுகாப்பை கருத்தில் கொள்ள வேண்டி உள்ளது என இவர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

இப்படியாக உள்ள சூழ்நிலையில்தான் பிரதமர் மோடி அவர்கள் தனது எக்ஸ் தளத்தில் தி சபர்மதி ரிப்போர்ட் படத்தை பாராட்டி பதிவிட்டுள்ளார்.