Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அதீத குளிரால் மாரடைப்பா? குடியரசுதின விழா ஒத்திகைக்கு சென்ற மாணவி பலி..!

குடியரசு தின ஒத்திகையின் போது 11ம் வகுப்பு மாணவி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம், இந்தூரஒ சேர்ந்தவர் விருந்தா திரிபாதி. இவர் அங்குள்ள பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த புதன்கிழமை பள்ளியில் குடியரசு தின விழா ஒத்திகை இருந்ததுள்ளது. அதற்கு சென்ற மாணவி குடியரசுதின ஒத்திகையில் ஈடுப்படுள்ளார்.

அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனை கண்ட ஆசிரியர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மாரடைப்பு ஏற்படுவதற்கு முன் அவருக்கு எந்த வித உடல் பாதிப்புகளும் இல்லை என அவரது மாமா தெரிவித்துள்ளார். மேலும், அதீத குளிரால் அவர் இறந்திருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

கடுமையான குளிர்காலங்களில் அதிகாலை4 மணி முதல் 10 மணி வரை உடலில் பல ஹார்மோன்கள் சுரப்பதால் ரத்தகட்டிகள் ஏற்பட்டு திடீரென இதயம் செயலிழக்க வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குடியரசு தின விழா ஒத்திகையின் போது மாணவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version