Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

‘துணிவு’ படத்தில் இடம்பெற்ற பல கெட்ட வார்த்தைகளுக்கு கேட் போட்ட தணிக்கை குழு !

இந்த ஆண்டு தொடக்கமே இரண்டு பெரிய நடிகர்களின் படங்கள் மோதிக்கொள்ளவிருக்கிறது, இது ரசிகர்களிடையே பெரிதளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்தின் துணிவு படமும், வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் வாரிசு படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பாக்ஸ் ஆபிசில் பெரிய சலசலப்பை ஏற்படுத்த போகிறது. இந்நிலையில் சமீபத்தில் அஜித்தின் துணிவு படம் தணிக்கை குழுவிற்கு சென்ற நிலையில் தற்போது படத்தில் சில வசனங்கள் கேட் செய்யப்பட்டும், மியூட் செய்யப்பட்டும் இருக்கிறது. அதன்படி துணிவு மொத்தம் 13 கட் செய்யும்படி தணிக்கை குழு அறிவுறுத்தி படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.Ayyappan on Twitter: "#Thunivu Censor Certificate https://t.co/sYVIB041RW"  / Twitter

தணிக்கை குழுவின் அறிவுரையின்படி, 13 கெட்ட வார்த்தைகள் படத்திலிருந்து கேட் செய்யப்பட்டு இருக்கிறது. இதுதவிர வட இந்தியாவை சேர்ந்தவர்களை வடக்கன் என்று கிண்டலடித்து பேசிய வசனத்தையும் திருத்தியமைக்கக் பரிந்துரை செய்யப்பட்டு இருக்கிறது. இப்படத்தின் மொத்த நீளம் 2 மணி நேரம் 25 நிமிடங்கள் ஆகும். வாரிசு படத்தோடு துணிவு படம் மோதப்போகிறது என்று கூறப்பட்டு வரும் நிலையில் வாரிசு படம் வெளியாவதற்கு ஒரு நாள் முன்னதாக அஜித்தின் துணிவு படம் வெளியாகக்கூடும் என்றும் சில உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளது.Ajith's Thunivu' censored with an U/A certificate | Tamil Movie News -  Times of India

வங்கி கொள்ளையை அடிப்படையாக வைத்து தான் துணிவு படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது, சமீபத்தில் வெளியான இப்படத்தின் பாடல் மற்றும் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தில் மஞ்சு வாரியார், ஜான் கொக்கேன், சமுத்திரக்கனி போன்ற பலர் நடித்துள்ளனர்.

 

Exit mobile version