Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தாயின் சேலையில் உயிரிழந்த 13 வயது சிறுமி !!

நாகர்கோயில் பகுதியில் தாயின் சேலையை வைத்து ஊஞ்சல் கட்டி விளையாடிய சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நகர்கோவில் கோட்டாறு பகுதில் குலாலர் தெருவை சேர்ந்த வெங்கடாசலம் என்பவரின் மகள் அக்ஷயா (13) ஏழாம் வகுப்பு பயின்று வருகிறார். கடந்த சனிக்கிழமை மாலை அக்ஷய தனது வீட்டின் மாடியில் தாயாரின் சேலையை வைத்து ஊஞ்சல் கட்டி விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக சேலை அக்ஷயாவின் கழுத்தை சுற்றி இறுக்கிக் கொண்டது. இதில் அவர் மூச்சுத் திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதை பார்த்த உறவினர்கள் ,அக்கம் பக்கத்தினர் அலறி ஓடி வந்த அக்ஷயா தன் உடலை மீட்டனர்.

இதுகுறித்து தகவலின் பேரில் காவல்துறையினர் சடலத்தை மீட்டு, அரசு பள்ளி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் 13 வயது சிறுமி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version