Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வெளியான புதிய கருத்து கணிப்பு! படுகுஷியில் எடப்பாடியார்!

சட்டசபை தேர்தலில் எந்த கட்சி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என புதுயுகம் தொலைக்காட்சி ஒரு கருத்துக்கணிப்பை நடத்தி அதனை வெளியிட்டு இருக்கிறது. இந்த கருத்துக் கணிப்பின் முடிவுகள் தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.தமிழகத்தில் இருக்கக்கூடிய 234 தொகுதிகளில் ஒரு வாக்குச்சாவடிக்கு 20 நபர்கள் என்று அடிப்படையில் 2900 வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களிடம் கருத்து கேட்பு நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதில் மேற்கு மண்டலத்தில் அதிமுக கூட்டணிக்கு 46.5 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. திமுக கூட்டணிக்கு இந்தப்பகுதியில் 38.5 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சென்னை மண்டலத்தில் ஆளும் கட்சியான அதிமுக கூட்டணிக்கு 39 சதவீத வாக்குகள் கிடைக்கும் எனவும் எதிர்கட்சியான திமுக கூட்டணிக்கு 45 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதே போல டெல்டா மாவட்ட பகுதிகளில் அதிமுகவிற்கு 43 சதவீத வாக்குகளும் திமுகவிற்கு 44 சதவீத வாக்குகளும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.அதேபோல வடக்கு மண்டலத்தில் அதிமுக கூட்டணிக்கு 45 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்றும் திமுக கூட்டணிக்கு 41 சதவீத வாக்குகளும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தெற்கு மண்டலத்தில் அதிமுக கூட்டணிக்கு 43 சதவீத வாக்குகளும் திமுக கூட்டணிக்கு 42.8 சதவீதம் அவர்களும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழகம் முழுவதும் புதுயுகம் தொலைக்காட்சி சார்பாக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் அதிமுக 44 சதவீத வாக்குகளும் திமுக 42 சதவீத வாக்குகளும் பெறும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல தமிழகத்தில் இருக்கக்கூடிய 234 தொகுதிகளில் அடிப்படையில் பார்த்தோமானால் அதிமுக131 இடங்களில் வெற்றி பெறும் எனவும்.திமுக 102 இடங்களில் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Exit mobile version