உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்திற்கு காவல்துறையினரின் கோரிக்கை மனுக்களை பரிசீலனை செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்ட சைலேந்திர பாபு!

0
159

தமிழகத்தின் முதலமைச்சரின் உங்கள் துறையில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் காவல் துறையில் மாவட்ட மற்றும் மண்டல அளவில் குறை தீர்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த முகாம்களில் பெறப்பட்ட மனுக்களை டிஜிபி சைலேந்திரபாபு பரியீலனை செய்து வருகிறார் என்று சொல்லப்படுகிறது.

இதுதொடர்பாக காவல் துறை இயக்குனர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, தமிழகத்தில் 1353 காவல்துறையினருக்கு அவர்கள் விருப்பத்தின் அடிப்படையில் சொந்த மாவட்டங்களுக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டிருக்கிறது. சென்னைக்கு 260 காவல்துறையினரும், திருவண்ணாமலை மாவட்டத்திற்கு 149 காவல்துறையினரும், மாற்றப் பட்டிருக்கிறார்கள. கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 99 காவல்துறையினரும், கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு 96 காவல்துறையினரும், திருநெல்வேலி மாவட்டத்திற்கு 86 காவல்துறையினரும், நாமக்கல் மாவட்டத்தில் 72 காவல்துறையினரும், சிவகங்கை மாவட்டத்திற்கு 68 காவல்துறையினரும், ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 60 காவல்துறையினரும், மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

சென்னை வடக்கு மண்டலத்தில் கடந்த 3ஆம் தேதி அன்று 300 காவல்துறையினரிடம் இருந்தும், 8ம் தேதி அன்று சென்னை மாநகர காவல் துறையினர் 760 பேரிடம் இருந்தும், கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன என்று தெரிவிக்கப்படுகிறது.

இதன் அடுத்த கட்டமாக வருகின்ற 15ஆம் தேதி அன்று காலை திருச்சியிலும், மாலையில் மதுரையிலும், 17ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று கோயம்புத்தூர் மாவட்டத்தில் காவல்துறையினர் குறை தீர்ப்பு முகாம் நடைபெற இருக்கின்றன. இதில் டிஜிபி சைலேந்திரபாபு பங்கேற்று காவல்துறையிடம் நேரடியாக மனுக்களை பெற்றுக் கொள்ள இருக்கிறார் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.