Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தமிழகத்தில் இன்று நடைபெறும் 13வது மெகா தடுப்பூசி முகாம்!

தமிழ்நாடு முழுவதும் 13வது மெகா தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் மையங்களில் இன்று நடைபெற இருக்கிறது. காலை 9 மணிக்கு தொடங்கும் இந்த முகாம் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த தடுப்பூசி முகாமை காலக்கெடு முடிந்து இரண்டாவது தவணை தடுப்பூசி எடுத்துக்கொள்ளாமல் இருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட இருக்கிறது.

அந்த விதத்தில் இதுவரையில் தமிழ்நாட்டில் 83 லட்சம் நபர்கள் இரண்டாவது தடுப்பு ஊசி செலுத்திக் கொள்ளாமல் உள்ளனர், தற்ப்போது 1 கோடியே 30 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் இருக்கின்றன.

அதுபோல பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் என்று 200 வார்டுகளிலும் 1600 பகுதிகளில் நகர் தடுப்பூசி முகாம் நடைபெற இருக்கிறது, இந்த நகை தடுப்பூசி சிறப்பு முகாம்களில் 2 லட்சம் நபர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதாகவும், கையிருப்பில் 11 லட்சத்து 83 ஆயிரத்து 905 தடுப்பூசிகள் இருப்பதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்து இருக்கிறது.

தலைநகர் சென்னையில் 10 லட்சத்து 39 ஆயிரத்து 704 பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த முகாமில் முன்னுரிமை வழங்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.

Exit mobile version