14 ஆயிரம் கோடி வங்கி மோசடி! நாடு கடத்தப்படும் மோடி!

0
125
14 billion bank fraud! Modi to be deported

14 ஆயிரம் கோடி வங்கி மோசடி! நாடு கடத்தப்படும் மோடி!

பிரபல வைரநகை கடை அதிபர் தான் நீறவ் மோடி.மிகப்பெரிய பொது வங்கிகளில் பஞ்சாப் நேஷனல் வங்கியும் ஒன்று.இவர் பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் வெளிநாட்டிலிருந்து வைரங்களை இறக்குமதி செய்வதாக ரூ.14 கோடி ரூபாய் பணத்தை கடன் வாங்கினார்.ஆனால் இவர் விஜய் மல்லையாப் போல கடனை வாங்கிவிட்டு அதனை திரும்பி செலுத்தாமல் வெளிநாட்டிற்கு சென்று தஞ்சம் அடைந்தார்.இவர் வெளிநாட்டிற்கு சென்ற பிறகு தான் தெரிய வந்தது இவர் வங்கியில் 14 கோடி ரூபாயை மோசடி செய்தது.

அதன்பின் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வந்தது.அவர்கள் விசாரணையில் தெரிய வந்தது என்னவென்றால்,இவர் வெளிநாட்டுக்கு செல்லும் முன் திட்டம்போட்டு அவரது அனைத்து நகை கடைகளின் நகைகளை விற்று அந்த பணத்தையும் எடுத்து சென்றுள்ளார்.நேஷனல் வங்கியில் ஊழியர்கள் சில சம்மதம் பட்டுள்ளதாகவும் தெரிய வந்தது.அதுமட்டுமின்றி அவர் இங்கிலாந்தில் தஞ்சம் அடைந்துள்ளார் எனவும் கண்டுபிடித்தனர்.இதற்கடுத்து இந்திய அரசு இங்கிலாந்து அரசுக்கு நிறவ் மோடி பணம் மோசடி செய்து வந்து அங்கு தலைமறைவாகியுள்ளார்.அதனால் அவரை கைது செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தது.இந்தியா கேட்ட கோரிக்கையின் பேரில் நகைக்கடை அதிபர் நிறவ் மோடியை இங்கிலாந்து அரசு கைது செய்தது.

மேலும் அவரை நாடு கடத்தும் படியும் இந்திய மத்திய அரசு,இங்கிலாந்து அரசுக்கு வேண்டுகோள் விடுத்தது.இதுத்தொடர்பாக இங்கிலாந்தில் உள்ள வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றத்தில் சிபிஐ வழக்கு தொடர்ந்தது.அப்போது நீறவ் தனது தரப்பை கூறியதாவது,இந்தியாவில் உள்ள சிறைச்சாலைகள் பாதுகாப்பான வசதிகள் இருக்காது.அதனால் நான் இந்நாட்டிலேயே சிறையில் உள்ளேன் எனக் கேட்டுக்கொண்டார்.

ஆனால் அவர் கூறியதை இங்கிலாந்து அரசு மறுத்துவிட்டது.அதற்கடுத்து பல நாட்களாக இந்த வழக்கு நிலுவையில் போட்டப்படி இருந்தது.அதனையொட்டி நேற்று இரவு இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் இறுதி முடிவு எடுத்தது.நீறவ் மோடியை நாடு கடத்துவதற்கான உத்தரவில் கையெழுத்திட்டது.இந்தியாவில் விஜய் மல்லையாவுக்காக சிறையில் ஏற்பாடு செய்திருந்த அறையான வெஸ்டர்ன் கழிவறை,டிவி,கட்டில் என்று அதிக வசதிகளுடன் உருவாக்கிய அவரது அறையில் இவரை அடைப்பதாக கூறியுள்ளனர்.