அரிசி திருடியவரை அடித்து கொலை செய்த வழக்கில் 14 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
கேரள மாநிலம் அட்டபாடி பகுதியில் ஆதிவாசி இளைஞர் மது (27) என்பவரை கடைகளில் அரிசி திருடியதாக கூறி அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கபட்டது. இதில் 16 பேரில் 14 பேர் குற்றவாளிகள் என மன்னார்க்காடு சிறப்பு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கி உள்ளார்.
ஹுசைன், மரபார், ஷம்சுதீன், ராதாகிருஷ்ணன், அபூபக்கர், சித்திக், எட்டாம் பிரதி உபைத், நஜீப், ஜைஜுமோன், சதீஷ், சதீஷ், ஹரீஷ், பிஜி, முனீர் ஆகியோரை நீதிமன்றம் குற்றவாளி என தீர்ப்பளித்து உள்ளது. இதில் அனீஷ்,அப்துல் கரீம் ஆகியோர் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.
2018 பிப்ரவரி 22 அன்று கேரள மாநிலம் அட்டப்பட்டியில் ஆதிவாசி இளைஞரான மது அரிசி திருடியதாக கும்பலால் அடித்து கொலை செய்யப்பட்டார். கேரளாவை உலுக்கிய இந்த வழக்கில் ஐந்தாண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு கொடுக்கப்பட்டு உள்ளது.அட்டப்பாடி சிந்தகி பகுதியைச் சேர்ந்த மது, தனது தந்தை இறந்ததையடுத்து, 7ம் வகுப்போடு படிப்பை நிறுத்தினார்.
பின்னர், ஒருங்கிணைந்த பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக பாலக்காடு சென்று மரவேலைப் பயிற்சி பெற்றார். பின்னர் பணி காரண்மாக ஆலப்புழா சென்றார். ஆனால், அங்கு ஏற்பட்ட தகராறில் தலையில் காயம் ஏற்பட்டது. அதன் பிறகு மது வீடு திரும்பிய மது தெருத்தெருவாக் அலைந்தார். காட்டில் ஏறுவதும் குகைகளில் வாழ்வதும் அடிக்கடி நடக்கும்.
சில சமயம் வீட்டுக்குத் திரும்பி வருவார். இப்படி காட்டுக்குள் நுழைந்த மது, முகலியில் உள்ள ஒரு கடையில் அரிசி மற்றும் பொருட்களை திருடியதாக குற்றம் சாட்டப்பட்டு, அந்த கும்பல் அவரை அடித்துக் கொன்று உள்ளது.