Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

14 வயது சிறுமியை முள் காட்டில் உயிரோடு எரித்த பயங்கரம்..? அந்தப் பெண் முள் காட்டிற்கு சென்ற காரணம்?

புதுக்கோட்டையில் 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவத்தில் இருந்து இன்னும் தமிழக மக்கள் வெளியே வரவில்லை.இந்தச் சம்பவம் நடந்து மூன்று நாட்கள் கூடவே ஆகாத நிலையில் திருச்சி அருகே 14 வயது சிறுமி எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. தமிழகத்தில் என்னதான் நடக்கிறது கொரோனா பிரச்சினையை விட இளம் பெண்கள் வன்கொடுமை அதிகமாக நடந்து வருகிறது

ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட சோமரசன்பேட்டை அருகே அரியாவூர் பாளையம் என்ற பகுதியில் வசித்து வரும் பெரியசாமி என்பவர் மகள் தான் இந்த சிறுமி.இந்தப் பகுதியில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வரும் நிலையில் பொதுக்கழிப்பிடம் என்று ஒன்று இல்லை.

அந்தப் பெண் முள் காட்டிற்குள் செல்ல காரணம்?

கழிப்பிடத்திற்கு தான் இந்த சிறுமி காட்டிற்குள் நேற்று மதியம் சென்றுள்ளார் ரொம்ப நேரமாகியும் அந்த சிறுமி வீடு திரும்பாததால் பெற்றோர் சந்தேகமடைந்து சிறுமியை தேடி காட்டிற்குள் சென்றனர் அப்போதுதான் அந்தச் சிறுமி தீயில் கருகி கிடந்ததை பார்த்து அலறி போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

போலீசார் விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி உள்ளனர்.பெண்ணின் உடல் முற்றிலுமாக எரிந்த நிலையில் இருந்தது இந்த சம்பவம் மதியம் 3 மணி முதல் 5 மணிக்குள் நடந்திருக்க வேண்டும் என்று போலீஸ் தரப்பினர் கூறுகின்றனர்.மேலும் உடற்கூறு ஆய்வு செய்த பின்னர்தான் இந்தப் பெண் பாலியல் பலாத்காரம் செய்து எரித்து கொல்லப்பட்டாரா அல்லது குடும்ப பகையினால் எரித்துக் கொல்லப்பட்டார் என்பது தெரியவரும் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகின்றனர்.

மேலும் செல்போன் சிக்னலை வைத்து அந்த காட்டிற்க்கு வந்தவர்களை ஆய்வு செய்து வருகிறது காவல்துறை.அந்தப் பகுதியின் டிஐஜி ஆனி விஜயா பொறுப்பேற்று இரண்டு நாட்கள்தான் ஆகிறது.அவர் பெண் குழந்தைகள் யாராக இருந்தாலும் எந்த பிரச்சினையாக இருந்தாலும் தன்னிடம் தயங்காமல் புகார் அளிக்கலாம் என்று கூறி தான் பொறுப்பேற்றார். ஆனால் இரண்டு நாட்கள் கூட ஆகாத இந்த நிலையில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது அந்த மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொலையாளிகளை பிடிக்க டிஎஸ்பி தலைமையிலான 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் இந்தியா என்று சொல்லப்பட்டு பல வருடங்கள் ஆனாலும் பத்தாயிரம் பேர் வசிக்கும் ஒரு பகுதியில் ஒரு பொது கழிப்பிடம் கூட இல்லாமல் இருப்பது ஏன் இது யார் குற்றம்?உலகமே கொரோனா பீதியில் உள்ள நிலையில் தமிழகத்தில் அடுத்தடுத்து இளம் குழந்தைகள் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டு வருகிறார்கள் என்னதான் நடக்கிறது தமிழ்நாட்டில் என்ற கேள்வி சாதாரண மக்களிடையேயும் தற்போது எழுந்துள்ளன.

Exit mobile version