14 ஆண்டுகள் படுக்கையில் இருந்த இயக்குனர் ஶ்ரீதரை பார்த்து கொண்டவர் இவர்!

0
283
#image_title

இயக்குனர் ஸ்ரீதரை பற்றி நாம் அனைவருக்கும் தெரியும். பெரிய பெரிய ஜாம்பவான்களை வைத்து எத்தனையோ படங்களை இயற்றி வெற்றி கண்டவர்.

அவரையும் இந்த பாழான போன நோய் விடவில்லை.

 

 

வெண்ணிற ஆடை

சிவந்த மண்

உரிமைக்குரல்

இளமை ஊஞ்சலாடுகிறது

கல்யாணப் பரிசு

தேன் நிலவு

நெஞ்சில் ஓர் ஆலயம்

நெஞ்சம் மறப்பதில்லை

காதலிக்க நேரமில்லை

சுமை தாங்கி

 

இவ்வாறு எத்தனையோ வெற்றி படங்களை அவர் இயக்கியவர். ஸ்ரீதர் என்ற பெயரை கேட்டாலே படம் ஓடும் என்று சொல்லும் அளவிற்கு அந்த காலம் இருந்தது.

 

பொல்லாத காலம் அவரை திருப்பி போட்டது. பக்கவாத நோயினால் படுத்த படுக்கையானார். அப்பொழுது அவருடன் இருந்து கண்ணுக்கு கண்ணாய் பார்த்துக் கொண்டவர் தான் தேவசேனா. இவர் ஸ்ரீதரின் மனைவி.

 

இவர் மறைந்த இயக்குனர் ஸ்ரீதரின் மனைவி..! மருத்துவமனையில் சீரியசான நிலையில் , சிகிச்சையில் இருக்கும்போது, சிலவேளைகளில் திடீரென யாரையாவது பார்க்க வேண்டும் என்று விரும்புவாராம் ஸ்ரீதர்..! உடனே தேவசேனா , ஸ்ரீதர் பார்க்க விரும்புகிறவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு “சார் பார்க்கணும்னு ஆசைப்படறார்… கொஞ்சம் வர முடியுமா?” என்று பணிவோடு, பரிதாபமாக கேட்பாராம்…!

 

இவர் கேட்கும் இந்த இரக்க தோனியிலேயே யாராக இருந்தாலும் ஓடி வந்து ஸ்ரீதரை பார்க்க வருவார்களாம்.

 

கணவன் விரும்பிய நண்பர்களை பேசி அழைத்து அவருடன் பேச வைத்து அவர் படும் சந்தோஷத்தை பார்த்து ரசித்த அந்த புண்ணியவதி தான் ஸ்ரீதரின் மனைவி. அவரின் கடைசி ஆசைகளை கூட ஒவ்வொன்றாய் நிறைவேற்றியவர் அவர்.

 

அவ்வப்பொழுது அந்த சமயத்தில் ஸ்ரீதர் பழைய நினைவுகளை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதனால் அவரிடம் பேச வரும் முக்கிய பிரமுகர்களிடம் பழைய நினைவுகளை அவர்களுடன் பேசுங்கள் என்று மருத்துவர் சொல்லுவார்.

 

ஆனால் , ஸ்ரீதர் பேசுவதே என்னவென்று. வந்தவர்களுக்கு புரியாத நிலையிலும் கூட, தேவசேனா கணவர் சொல்வதைப் புரிந்து கொண்டு அதை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வாராம்…!

 

இப்படி 14 ஆண்டுகள் படுத்த படுக்கையாகவே ஸ்ரீதர் இருந்தாராம். அவரை அவ்வளவு நன்றாக பார்த்துக் கொண்டாராம் தேவசேனா. ஒரு நாள் கூட அவர் அழுவதில்லை.

 

2008 ஆண்டு ஸ்ரீதர் காலமடைந்தார். அப்பொழுது அவர் கண்களில் பெருகிய கடல் போல் வீசும் அந்த தண்ணீரை பார்க்க நேர்ந்தது அவர் இறந்த பொழுது தான்.