1400 கிலோ ரேஷன் அரிசி கடத்தல்! வாகன தணிக்கையில் கண்டுபிடிப்பு
சூரமங்கலம் போலிசார் ரெட்டிப்பட்டி ரவுண்டானா அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த வேனை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் 28 மூட்டைகளில் சுமார் 1,400 கிலோ ரேஷன் அரிசியை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து ரேஷன் அரிசியை கடத்தி விற்க முயன்றதாக சேலம் மணியனூர் காத்தாயம்மாள் நகரை சேர்ந்த கண்ணன் (வயது 42), நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பருத்திபள்ளி பகுதியை சேர்ந்த ராஜா (37) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர்களிடம் ரேஷன் அரிசி மூட்டைகளை எந்த ஊருக்கு கடத்தப்படுகிறது? இதற்கு உடந்தையாக இருந்தவர்கள் யார்? யார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.