Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்தியாவிற்கு அமலுக்கு வரும் 144! எச்சரிக்கை விடுத்த உலக சுகாதார அமைப்பு!

Infections are less! Relaxation to be demolished?

Infections are less! Relaxation to be demolished?

இந்தியாவிற்கு அமலுக்கு வரும் 144! எச்சரிக்கை விடுத்த உலக சுகாதார அமைப்பு!

தொற்றானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் வேளையில் தற்பொழுது எம் ஐ டியில்  அறுபத்தி ஏழு பேருக்கு புதிதாக கொரோனா நோய் தொற்று உறுதியாகியுள்ளது.தற்பொழுது இந்தியாவில் இரண்டு வாரங்களில் அதிக அளவு கொரோனா தொற்றின் எண்ணிக்கை உயரும் என உலக சுகாதார அமைப்பின் தலைமை அறிவியலாளர் சௌமியா சாமிநாதன் எச்சரித்தார். அவர் கூறியதை தொடர்ந்து தற்போது எம் ஐ டி யில் 67 பேருக்கு கொரோனா தொற்று  உறுதியாகி உள்ளது.

இவர்கள் குரோம்பேட்டை எம்ஐடி விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டு  வைத்துள்ளனர். மேலும் அவர்களுக்கு விடுதியிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களை கொரோனா தொற்றை  கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் தொடர்பாக மேற்கொண்டு ஆலோசித்து வருகிறார். இந்த ஆலோசனை ஆனது கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது. இதில் மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று ஊரடங்கு குறித்து முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நெருங்கி வரும் பண்டிகை காலங்களில் மக்கள் அதிக அளவு கூட்டம் கூட நேரிடும். அதனால் தமிழக அரசு நடவடிக்கைகளை கடுமையாக அமல் படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரவு ஊரடங்கு அல்லது டெல்லி கர்நாடக அரசை போன்று வார இறுதி முழு ஊரடங்கு அமல்படுத்த அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கின்றனர். நேற்று நடைபெற்ற ஆலோசனையில் வெள்ளி சனி ஞாயிறு ஆகிய தினங்களில் ஆலயங்களில் வழிபட தடை செய்யப்பதுவதாக பரிந்துரை செய்யப்பட்டது என  தகவல்கள் வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து இன்றும் கொரனோ தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மு க ஸ்டாலின் அவர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை பார்த்த பிறகு இந்திய முழுவதும் முழு ஊரடங்கு போட அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறுகின்றனர்.

Exit mobile version