Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நாளை முதல் ஊரடங்கு உத்தரவு! மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் செவ்வாய்க்கிழமை சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இரண்டு மாநிலத்திலும் ஒரே கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து வாழ்க்கை எண்ணிக்கையானது மே மாதம் இரண்டாம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது.இதனை தொடர்ந்து தமிழகத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் மிகத் தீவிரமாக பிரசாரத்தில் இறங்கி வருகிறார்கள். இதற்கிடையில் திமுகவைச் சார்ந்த ராசாவுக்கு 48 மணி நேரத்திற்கு பிரச்சாரம் செய்ய முடியாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு இருக்கிறது.அதோடு தேர்தல் பறக்கும் படை மற்றும் வருமானவரித் துறையினர் தமிழகம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், நேற்று முக ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை செய்து இருக்கிறார்கள். இது திமுக வட்டாரங்களில் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.இந்த நிலையில், புதுச்சேரி சட்டசபை தேர்தல் வரும் செவ்வாய்க்கிழமை நடைபெற இருக்கிறது. இதனை அடுத்து அரசியல் கட்சிகள் அங்கு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதோடு தேர்தல் சமயத்தில் எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்காமல் தடுப்பதற்கு தேர்தல் ஆணையம் மிக மும்முரமாக செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இது தொடர்பாக புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் பூர்வ கார்க் தெரிவித்ததாவது, புதுச்சேரியில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் மாதம் 6ஆம் தேதிக்கு 48 மணி நேரத்திற்கு முன்பாகவே 144 தடை உத்தரவு அமல் படுத்தப் படுகின்றது. அமைதிக்காகவும் சட்டவிரோதமான வகையிலும் ஒன்று கூடுதல் வைத்திருத்தல் மற்றும் பேனர் வைத்திருத்தல் கம்பிகள் போன்றவற்றை வைத்திருப்பது உள்ளிட்டவை தடை செய்யப்படுகின்றன. அதோடு கோஷங்களை எழுப்புதல், ஒலிபெருக்கிகளை பயன்படுத்துதல் மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதோடு வீடு வீடாக சென்று பொதுமக்களை சந்தித்து வாக்கு கேட்பதற்கும் தடை விதிக்கப்படுகிறது. பொது ஊரடங்கு மத விழாக்கள், திருமணங்கள், இறுதி சடங்குகள் மற்றும் மற்ற தேர்தல் தொடர்புடைய பணிகளுக்கு இந்த 144 தடை உத்தரவு பொருந்தாது. மக்கள் அதிகமான அளவில் வந்து தங்களுடைய ஜனநாயக கடமையை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்திருக்கிறார்.

Exit mobile version