ஏப்ரல் 14க்கு பிறகு ஊரடங்கு தொடருமா? பிரதமர் மோடி அதிரடி தகவல்!

0
128

கொரோனா வைரஸின் கொடூர தாக்குதலுக்கு உள்ளானதால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய தேவைகளை தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் மக்கள் பொது இடங்களுக்கு வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது.

இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுமா என்பது குறித்து பல்வேறு வதந்திகள் வந்த வண்ணம் இருந்தன. இதனால் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் உரையாடி அவர்களின் தேவைகளை கேட்டு தெரிந்து கொண்டார்.

இதனையடுத்து பிரதமர் மோடி லோக்சபா மற்றும் ராஜ்யசபா உறுப்பினர்களுடன் பேசி அவர்களின் ஆலோசனைகளை கேட்டு கொண்டார். இதில் தெலுங்கானா முதல்வர் மற்றும் ராஜ்யசபா எம்பி அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட சிலர் வைரஸ் பரவல் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு நீட்டிக்க கோரியிருந்தனர்.

இந்த நிலையில் இன்று 5க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட எதிர்க்கட்சி தலைவர்களுடன் காணொலி காட்சி மூலம் கலந்து உரையாடியுள்ளார். இந்த பேச்சுவார்த்தையில் பெரும்பாலான மாநில கட்சி தலைவர்கள் ஊரடங்கு நீட்டிக்கும்படி கேட்டதாக தெரிகிறது.

இதனால் பிரதமர் மோடி வரும் 11ஆம் தேதி மாநில முதல்வர்களுடன் மீண்டுமொருமுறை கலந்தாலோசித்து ஊரடங்கு நீட்டிக்க படுவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று கூறியுள்ளார். நடக்க இருக்கும் பேச்சுவார்த்தையில் ஊரடங்கு முழுமையாக தொடருமா அல்லது பகுதி நேரமாக தொடருமா என்பது பற்றி முடிவு எடுக்கபடும் என்று தெரிகிறது.