Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஏப்ரல் 14க்கு பிறகு ஊரடங்கு தொடருமா? மத்திய அரசு வெளியிட்ட அதிரடி தகவல்!

உலகமே கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தங்கள் நாட்டு மக்களை பாதுகாக்க தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்த பாரத பிரதமர் மோடி யாரும் வெளியில் வரவேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொண்டார்.

இதனால் பொது இடங்களில் சுற்றித் திரியும் இளைஞர்களையும் கடைத்தெருக்களில் கூட்டம் கூடும் பொது மக்களிடமும் காவல்துறை கடும் நடவடிக்கைகளை எடுத்து வந்தது. மேலும் அத்தியாவசிய தேவைகளை தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் பொது இடங்களுக்கு வரக்கூடாது என்று மாநில அரசால் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இதற்கிடையில் இளைஞர்கள் சிலர் காவல்துறையின் எச்சரிக்கையை மீறி பொது இடங்களில் பொழுதுபோக்காக சுற்றித்திரிந்தவர்கள் மீது வழக்குகள் பதியப்பட்டன. மக்கள் பொது இடங்களில் வருவதாலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருப்பதாலும் 21 நாள் ஊரடங்கு நீக்கப்படலாம் என்ற தகவல் மக்களிடையே பரவி வந்தது.

இந்த நிலையில் மத்திய அமைச்சரவையின் செயலாளர் ராஜீவ் கௌபா ஏப்ரல் 14க்கு பிறகு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படாது கூறினார். மேலும் இந்த நோய்த்தொற்று கட்டுக்குள் வரவில்லை என்றால் மத்திய அரசு கூடி ஊரடங்கு நீக்கப்படுவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் அந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார்.

Exit mobile version