15 நாட்கள் கோடை விடுமுறை!! அங்கன்வாடி பணியாளர்கள் மகிழ்ச்சி!!

0
253
15 days summer vacation!! Anganwadi workers happy!!

15 நாட்கள் கோடை விடுமுறை!! அங்கன்வாடி பணியாளர்கள் மகிழ்ச்சி!!

தமிழக அரசு அங்கன்வாடி பணியாளர்களுக்கு 15 நாட்களுக்கு கோடை விடுமுறை அளித்துள்ளது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் பணியாற்றுபவர்களுக்கு வருடம்தோறும் கோடை விடுமுறை அளிக்கப் படுகிறது. அனால் அங்கன்வாடி பணியாளர்களுக்கு கிடையாது.

இந்த கோடை விடுமுறை என்பது அங்கன்வாடி பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையாகவே இருந்து வந்தது. தற்போது தமிழக அரசு மே 10 ஆம் தேதி முதல் மே 24ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு அங்கன்வாடி பணியாளர்களுக்கு விடுமுறை அளித்துள்ளது.

அங்கன்வாடி மையங்கள் வருடம் முழுவதும் இயங்குவதற்கும், உணவூட்டும் பணிகளில் இடையூறு வராமல் இருப்பதற்கும் ஏற்ப மே மாதம் இரண்டாவது வாரம் அங்கன்வாடி உதவியாளர்களுக்கும், மூன்றாவது வாரம் அங்கன்வாடி பணியாளர்களுக்கும், நான்காம் வாரம் குறு அங்கன்வாடி மையங்களில் உள்ள முதன்மை பணியாளர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு வந்துள்ளது.

அங்கன்வாடி மையங்களில் 2 வயது முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகள் முன் பருவ கல்வி பெற்று வருகின்றனர். இவர்களுக்கு நாளொன்றுக்கு சமைத்த உணவு, முட்டை, பயறு வகைகள், காய்கறிகள் மற்றும் சத்துமாவு போன்றவை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த கோடை விடுமுறை காலங்களில் குழந்தைகளின் வருகை 50 சதவீதம் மட்டுமே உள்ளதால் மேற்கண்ட உணவுகள் அனைத்தையும் மையங்களுக்கு வரும் குழந்தைகளுக்கு வழங்க இயலாது எனவும், அதற்காக உலர் உணவு பொருட்களையும் வழங்க கூடாது என மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய அக்னி நட்சத்திர வெயில் குழந்தைகளால் தாங்க முடியாது என்பதாலும், அங்கன்வாடி பணியாளர்களுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என்பதாலும் தமிழக அரசு 15 நாட்கள் கோடை விடுமுறை அளித்துள்ளது.

15 நாட்கள் கோடை விடுமுறையிலும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து கிடைக்கும் வகையில், நாள் ஒன்றுக்கு 50 கிராம் வீதம் 15 நாட்களுக்கு 750 கிராம் சத்துமாவு குழந்தைகளுக்கு வீட்டிற்கு குடுத்து அனுப்பப் படும் என கூறப்படுகிறது.