கோவை விவசாய நிலத்தில் 15 அடி நீள ராஜநாகம்; பீதியில் அப்பகுதி மக்கள்

0
141

கோவையில் உள்ள விவசாய நிலத்தில் இருந்து மூன்றாவது முறையாக 15 அடி நீள ராஜநாகத்தை வனத்துறையினர் மீட்டனர்.

கோவை தொண்டாமுத்தூரை அடுத்த நரசீபுரம் மலையடிவார பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் 15 அடி நீள ராஜநாகம் உள்ளது தெரியவந்தது.இந்த தகவல் போளுவாம்பட்டி வனத்துறையினருக்கு 
தெரிவிக்கப்பட்டதை அடுத்து வனச்சரகர் ஆரோக்கியசாமி தலைமையில்,பாம்பு பிடிக்கும் நபர்கள் மூலமாக விவசாய நிலத்தில் புகுந்துள்ள அந்த 15 அடி நீள ராஜ நாகத்தை பத்திரமாக மீட்டனர்.

நரசீபுரம் விவசாய நிலத்தில் இருந்து ஏற்கனவே இரண்டு முறை ராஜநாகம் மீட்கப்பட்டு வைதேகி நீர்வீழ்ச்சி அருகே உள்ள வனப்பகுதிக்கு கொண்டு சென்று விடப்பட்டது.

ஆனால் மீண்டும் ராஜநாகம் விவசாய நிலப்பகுதியில் புகுந்து விடுவதால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.
மேலும் இந்த ராஜநாகத்தால் மக்களுக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் அந்த ராஜ நாகத்தின் உடல் நிலையை பரிசோதித்த பின்னர் அதனை சிறுவாணி வனப்பகுதிக்கு கொண்டு சென்று விடுவித்துள்ளனர்.