Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

என்னது முதல்வருக்கு கடன் இருக்கிறதா? அதிர்ச்சியில் அரசியல் கட்சிகள்!

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெறவிருக்கிறது அதற்கான ஆயத்தப் பணிகளில் அரசியல்கட்சிகளும் மற்றும் தேர்தல் ஆணையம் போன்றவை மிக தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில், சட்டசபை தேர்தலில் நிற்கும் ஒவ்வொருவரும் தங்களுடைய சொத்து மதிப்பு எவ்வளவு என்பதை தேர்தல் ஆணையத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் விதியாக இருந்து வருகிறது.

அந்த வகையில், தமிழகத்தில் போட்டியிடக்கூடிய அனைத்துக் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களும் தங்களுடைய சொத்து மதிப்புகளை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்து வருகிறார்கள்.

அந்த வகையில், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், அதேபோல திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் ,போன்ற பல பிரபலங்கள் தங்களுடைய சொத்துக்களின் மதிப்பு எவ்வளவு என்பதை சமர்ப்பித்து வருகிறார்கள்.

அந்தவகையில், நேற்றைய தினம் வேட்புமனு தாக்கல் செய்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய சொத்து விவரங்களையும் தாக்கல் செய்திருக்கிறார். அந்த விதத்தில் அவருடைய பெயரில் இருக்கின்ற சொத்துக்களின் மொத்த மதிப்பு 47.64 லட்சம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பெயரில் எந்தவித அசையா சொத்துக்களும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அவருடைய குடும்ப சொத்தாக 22 ஏக்கர் நிலம் மற்றும் 6 ஆயிரத்து 700 சதுர அடி மனை மட்டுமே இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக, இதுவரை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பெயரில் சொந்த வீடு மற்றும் நிலம் எதுவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் முதல்வரின் மனைவி பெயரில் 1.4 கோடி ஆசையும் சொத்துக்கள் மற்றும் 2.89 கோடி அசையா சொத்துக்களும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல ரூபாய் 10 4.75 லட்சம் கடன் இருப்பதாகவும் மற்றும் ரூபாய் இரண்டு லட்சம் வரையில் ரொக்கம் கையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சுமார் 90 சவரன் தங்க நகை இருப்பதாகவும் அதோடு டெபாசிட் தொகையாக 2.52 லட்சம் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.அதோடு முதல்வராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பெயரில் இதுவரையில் சுமார் 15 லட்சம் ரூபாய் கடன் இருப்பதாகவும், தங்க நகைகள் 100 கிராம் மற்றும் வைப்புத் தொகையாக 37.4 5லட்சம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Exit mobile version