என்னதான் ஊரடங்கு போடப்பட்டு இருந்தாலும் இந்தியாவில் கொலை கொள்ளையை விட நாளுக்கு நாள் இளம் வயது சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்யும் வன்கொடுமை அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது.
மேற்கு வங்க மாநிலம் சோப்ரா பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்து கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் போராட்ட உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.
சிறுமியின் பாலியல் வன்கொடுமையை கண்டித்து அந்த ஊர் மக்கள் அனைவரும் தேசிய நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அங்கிருந்த வாகனங்களுக்கு தீ வைத்து கொளுத்தினர்.காவல்துறையினர் அவ்விடத்தை விரைந்து பேச்சுவார்த்தை நடத்த முயன்றபோது போலீசாரின் ஜீப்-யை மக்கள் கொளுத்தியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் மக்களை கட்டுக்குள் கொண்டுவர வேறுவழி தெரியாமல் தடியடி நடத்தியும்,கண்ணீர் புகை குண்டுகள் வீசியும், தண்ணீர் பீச்சி அடித்தும் கூட்டத்தை கலைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.தற்போது போராட்டத்தில் இருந்து மக்களை கட்டுக்குள் கொண்டு வந்த போலீசார் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த காமகொடூரன்களை கூடிய விரைவில் கண்டுபிடித்து விடுவோம் என்ற நம்பிக்கை அளித்துள்ளனர்.இதனால் தற்போது மக்கள் அமைதி காத்து வருவதாக காவல்துறையினரிடம் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
மக்கள் திடீரென்று போராட்டத்தில் இறங்கியதால் அந்த இடமே போர்க்களம் போல் காட்சியளித்தது.என்னதான் போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் வன்கொடுமையை செய்தவர்களை கைது செய்தாலும் இந்தியாவைப் பொருத்தமட்டில் தினம் தினம் பாலியல் வன்கொடுமை சம்பவம் அரங்கேறியேதான் இருக்கிறது.