150 ஆண்டுகளைக் கடந்த அதிசய மரம்! பராமரித்து வரும் சேலத்து மக்கள்!
சேலம் மாவட்டம் பச்சமலை அடிவாரம் வேப்பட்டி மலை கிராமம். அந்த கிராமத்தில் ஏறக்குறைய 100 மலைவாழ் பழங்குடியின குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். அந்த கிராமத்தில் 150 ஆண்டு முதிர்ந்த வேப்பமரம் இந்த வேப்பமரம் கிராம மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் அமைதியின் சின்னமாகவும், பொழுதுபோக்கு மையமாகவும் திகழ்ந்து வருகிறது.
இந்த வேப்ப மரம் ஐந்து தலைமுறையாக கிராம புற மக்களை பராமரித்து பாதுகாத்து வணங்கி வருகிறது. கிராமப்புற மக்கள் இதனை வருகின்றனர். இந்த வேப்பமரத்தைச் சுற்றி குடியிருப்பு பகுதிகள் அமைந்துள்ளதாலேயே இந்த கிராமம் வேப்பட்டி என பெயர் பெற்றது.
இந்த கிராமத்தின் கோவில் திருவிழாக்கள் கொண்டாடப்படுவது குறித்து முடிவு செய்வதும், கிராம மக்களுக்குள் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் இடமாகவும் இந்த வேப்ப மரம் அச்சாரமாக இருந்து வருகிறது. கிராமம் தோன்றிய காலத்திலிருந்தே இந்த வேப்பமரம் இருந்து வருவதாக முன்னோர் கூறியுள்ளனர்.
இந்த வேப்ப மரத்தைச் சுற்றி, நவீன காலத்திற்கு ஏற்ப சிமெண்ட் காங்கிரட் திண்ணை அமைத்து கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இது மட்டும் இன்றி மருத்துவ குணம் கொண்ட இந்த முதிய மரத்தின் இலை பட்டையை பயன்படுத்தி பாட்டி வைத்தியம் முறைகளில் எளிய மருந்து தயாரித்து கிராம மக்கள் பல்வேறு நோய்களுக்கு சுயமான தீர்வு ஏற்படுத்திக் கொள்கின்றனர்.
இந்த வேப்பமரம் 25 அடி உயரத்தில் பரந்து விரிந்து, அடிப்பகுதி 5.40 மீட்டர் சுற்றளவு பருமன் கொண்டு தனி சிறப்பாகும். இந்த வேப்ப மரத்திற்கு தெய்வ சக்தி இருப்பதாக கருதி, முன்னோர்கள் காலத்தில் இருந்து பாதுகாத்து பராமரித்து வணங்கி வருகிறோம். இரு ஆண்டுக்கு முன் பலத்த சூறைக்காற்றுடன் பெய்த மழையில் இந்த வேப்ப மரத்தின் கிளை ஒன்று முறிந்து விழுந்தது பிற மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.