நாளுக்கு நாள் ரேஷன் அரிசி கடத்துபவர்கள், ரேஷன் அரிசி கொள்ளை அதிகரித்து வருகிறது.
ஆம்பூரில் இருந்து 15,000 கிலோ ரேஷன் அரிசி கடத்திச் சென்ற ஓட்டுனரை அதிகாரிகள் கைது செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் பகுதியில் சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கொரோனா தடுப்பு பணிக்காக செக்போஸ்டில் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வட்டாட்சியர் பத்மநாபன் மற்றும் வாணியம்பாடி துணை வட்டாட்சியர் குமார் ஆகியோர் தலைமையில் பணி செய்யும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக தகவல் கிடைத்தது.
இதனையடுத்து ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலை செக்போஸ்டில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதனையடுத்து பாதையின் வழியாக கர்நாடக பதிவு எண் கொண்ட சரக்கு லாரி வானத்தை மறித்து சோதனை செய்தனர்.
இந்த சோதனையில் லாரியின் இரண்டு பக்கமும் தவிட்டு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு, நடுவில் 15 டன் ரேஷன் அரிசியை பதுக்கி இருந்தது தெரியவந்தது.
இதன்பிறகு லாரியை பறிமுதல் செய்தபிறகு மேலும் அங்கிருந்து, காவல்துறையினர் மற்றும் உணவு மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகளை வரச் செய்து விசாரணை நடத்தினர்.
இந்த ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட ஓட்டுநர், வேலூர் மாவட்டத்தின் குடியாத்தம் பகுதியில் உள்ள மேல்ஆலத்தூர் பகுதியைச் சேர்ந்த அரவிந்த் என்பது தெரியவந்தது. அவரையும் கைது செய்து இதன் பின்னணி என்ன என்பது பற்றி விசாரித்து வருகின்றனர்.
மேலும் ஆம்பூரில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் இதுவரை 85,000 கிலோ ரேஷன் அரிசி கடத்திச் சென்றுள்ளனர். இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட 6 லாரிகளில் கடைசியாக இந்த லாரி ஓட்டுனரை மட்டும் கைது செய்துள்ளனர்.
மீதமுள்ள லாரிகளின் ஓட்டுனர்கள் தடுப்பு பணியின்போது தப்பி ஓடிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.