மாதம் 15000 சம்பளத்தில் சுகாதாரத் துறையில் வேலை! விண்ணப்பிக்க செப்டம்பர் 13 கடைசி நாள்.. மிஸ் பண்ணிடாதீங்க!
திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சுகாதாரத் துறையின் தேசிய நலவாழ்வு குழுமத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்பொழுது வெளியாகியுள்ளது.
இந்த காலிப்பணியிடங்கள் ஒப்பந்தம் அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமானவை என்பதால் நிரந்தரப் பணியாக மாறுவதற்கு வாய்ப்பு இல்லை.பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 13-09-2023 வரை வரவேற்கப்படுகிறன.
பணி: மருந்தாளுனர் (Pharmacist)
காலிப்பணியிடங்கள்: இப்பணிக்கு ஒரு காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி: அரசால் அங்கீகரிக்கப்ட்ட கல்வி நிறுவனத்தில் D.Pharm அல்லது B.Pharm படித்து முடித்திருக்க வேண்டும்.
மாத ஊதியம்: இப்பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரருக்கு மாதம் ரூ.15,000 மாத ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்முகத் தேர்வு அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை: தபால் வழி
மருந்தாளுனர் பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வம் இருக்கின்ற நபர்கள் இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள https://cdn.s3waas.gov.in/s318997733ec258a9fcaf239cc55d53363/uploads/2023/08/2023082999.pdf என்பதினை பதிவிறக்கம் செய்து பூர்த்தியிட்டு முறையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு விண்ணப்பத்தினை அனுப்ப வேண்டும்.
முகவரி:
கௌரவச் செயலாளர்/ துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள்,மாவட்ட நலவாழ்வு சங்கம், துணை சுகாதார பணிகள் அலுவலகம்,பழைய அரசு மருத்துவமனை,செங்கம் ரோடு, திருவண்ணாமலை மாவட்டம் – 606603
கடைசி தேதி : இப்பணிக்கு விண்ணப்பிக்க 13-09-2023 கடைசி தேதி ஆகும்.