1588 கோடி ஒப்பந்தத்திற்கு 600 பேருக்கு வேலையா? சாம்சங் உடன் இணையும் தமிழக அரசு!
முன்னணி நிறுவனங்களில் சாம்சங் ஒன்று. நமது தமிழகத்தில் சாம்சங் எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிக்கும் ஆலை உள்ளது. இந்த ஆளையானது 2006 ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி முன்னிலையில் ஒப்பந்தம். அதன்படி 450 கோடி ரூபாய் முதலீட்டில் இந்த எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிக்கும் ஆலை நிறுவப்பட்டது. இதன் மூலம் 2500 நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது.
கலைஞர் கருணாநிதி மூலம் ஒப்பந்தம் செய்யப்பட்ட இந்த ஆழையானது ஒரே வருடத்தில் கட்டி முடித்து நடைமுறைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. இதே போல தற்பொழுது ஸ்டாலின் அவர்கள் ஆட்சியில் இருக்கும் இந்த நேரத்தில் சாம்சங் நிறுவனத்துடன் மீண்டும் கை கோர்த்து உள்ளார். தற்பொழுது 1588 கோடியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இந்த ஒப்பந்தத்தின் மூலம் காற்றழுத்த கருவிகள் தயாரிக்கும் ஆலையை தொடங்குகிறது. இந்த ஆழையானது ஸ்ரீபெரும்புதூரில் அமைய உள்ளதாக கூறியுள்ளனர்.
நாளை நிறுவிய பிறகு சுமார் 600 பேருக்கும் மேலாக வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவித்துள்ளனர். முன்னதாகவே எலக்ட்ரானிக் தயாரிக்கும் ஆலைய அமைப்பு 2500 பேருக்கு மேல் வேலை வழங்கியதால் இம்முறையும் அதிகளவு எதிர்பார்த்து உள்ளனர். இந்த ஆளையானது 2023 ஆம் ஆண்டிற்குள் கட்டி முடிக்கப்பட்டு செயல்படுத்தலாம் என்று கூறுகின்றனர். மேலும் இந்த ஆலையை நிறுவியதன் மூலம் அடுத்த ஆண்டு நிறைவு பெறுவதற்குள் சுமார் 80 லட்சம் காற்றழுத்த கருவிகள் தயாரிக்கப்படும் என கூறுகின்றனர். அதேபோல 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் 144 லட்சம் அளவுக்கு இந்த காற்றழுத்த கருவிகள் உற்பத்தியாகும் என திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.கருணாநிதி அவர்களால் தொடங்கப்பட்ட ஆலையில் 400 கோடி ஒப்பந்தத்தில் 2000 ஆயிரத்திற்கு மேலாக வேலை வாய்ப்பு இல்லாதவர்கள் வேலையை பெற்றனர்.ஆனால் தற்போது 1000 கோடிக்கு முதலீடு செய்து வெறும் 600 பேருக்கு மட்டுமே வேலைவாய்ப்பு கிடைக்கும் என கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.