Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

16 கோடி மக்கள் கண்டு மகிழ்ந்த ராமர் கோயில் பூஜை

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி தொடங்கி வைக்க நரேந்திர மோடி அவர்கள் கடந்த வாரம் அடிக்கல் நாட்டினார்.அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியை தூர்தர்ஷன் சேனல் நேரலையாக ஒளிபரப்பியது.இந்தியாவில் மட்டுமே 16 கோடிக்கும் அதிகமான மக்கள் பார்த்துள்ளனர் என்று அரசு ஊடகமான பிரச்சார் பாரதி தெரிவித்துள்ளது.

நிகழ்ச்சி நேரலையை 200க்கும் மேற்பட்ட சேனல்களுக்கு வழங்கப்பட்டதால் ஏறக்குறைய 500 கோடிக்கும் அதிகமான நிமிடங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று பிரசார் பாரதி தெரிவித்துள்ளது.

கடந்த 5-ம்தேதி ராமர் கோயில் கட்டும் பணி பூமி பூஜை நடந்தது. நிகழ்ச்சியில் நரேந்திர மோடி அவர்கள் அடிக்கல் நாட்டினார். ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆளுநர் ஆனந்த்பென் படேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த பூமி பூஜை நிகழ்ச்சியை பிரசார் பாரதியின் தூர்தர்ஷன் சேனல் மட்டுமே நேரலையில் ஒளிபரப்ப அனுமதி பெற்று, 200க்கும் மேற்பட்ட சேனல்கள் தங்கள் தொலைக்காட்சி நேரலை செய்தனர்.அந்த வகையில் 5ஆம் தேதி 10:45 முதல் பிற்பகல் 2 மணி வரை நடந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் நேரடி ஒளிபரப்பு செய்தது பிரசார் பாரதி.இந்த நிகழ்வினை இந்தியாவில் மட்டுமே 16 கோடிக்கு மக்கள் பார்த்து ரசித்தனர் என்று ஒரு கருத்து வெளியாகியுள்ளது.

1இதுகுறித்த பிரச்சார் பாரதியின் தலைமை நிர்வாக அதிகாரி சசி சேகர் கூறுகையில் ,அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியில் இந்தியாவில் மட்டுமே 16 கோடிக்கும் மேற்பட்டோர் தந்துள்ளதாக கூறினார்.

தூர்தர்ஷன் சேனலில் இருந்து ஒளிபரப்பு உரிமம் பெற்று 200 சேனல்கள் காலை 10 மணி முதல் 2 மணிவரை ஒளிபரப்பாகிய நிகழ்வினை ஒட்டு மொத்தமாக 700 கோடிக்கும் அதிகமான நிமிடங்கள் பார்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Exit mobile version