Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஆபத்தான நிலையில் 16 வயது சிறுவன்! காரணம் தடுப்பூசிதான்!

16 year old boy in dangerous condition! The reason is the vaccine!

16 year old boy in dangerous condition! The reason is the vaccine!

ஆபத்தான நிலையில் 16 வயது சிறுவன்! காரணம் தடுப்பூசிதான்!

கொரனா தொற்றின் காரணமாக தற்போது மாநிலங்கள் அனைத்தும் என இந்தியா முழுவதிலும் தடுப்பூசி போடும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஆனால் 18 வயது நிறைவடைந்தவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி என்று அரசு அறிவித்துள்ளது. சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் இன்னும் எங்குமே தொடங்கப்படவில்லை. அதற்கான மருந்தும் கண்டறியப் படவில்லை. அரசும் அறிவிக்க வில்லை.

ஆனால் மத்திய பிரதேசத்தின் மாவட்டத்துக்கு உட்பட்ட மொரேனா மாவட்டத்துக்கு உட்பட்ட பக் கா புரா  பகுதியில் உள்ள தடுப்பூசி மையத்தில் பில்லு என்ற 16 வயது சிறுவனுக்கு நேற்று முன்தினம் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்ட உடனே சிறுவனுக்கு தலைசுற்றல் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டு உள்ளது. அதோடு வாயிலிருந்து நுரையும் தள்ளி உள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் தடுப்பூசி மையத்தில் பெரும்ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனை தொடர்ந்து சிறுவனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அறிந்து சுகாதார அதிகாரிகள் அவனை உடனே குவாலியரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அந்த சிறுவனின் பெற்றோர்களோ அங்கு அழைத்துச் செல்லாமல், அவர்களது வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டனர்.

இதனை தொடர்ந்து சிறுவனின் உடல் நிலை குறித்து அறிய அவனது வீட்டுக்கு சுகாதார அதிகாரிகள் நேற்று சென்றுள்ளனர். அப்போது 18 வயது பூர்த்தி அடையாத சிறுவனுக்கு   எப்படி தடுப்பூசி போட்டீர்கள் என பல்வேறு கேள்விகள் கேட்கப் பட்டது. மேலும் இது குறித்து கண்டறிய மாவட்ட நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது. இந்த சம்பவம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Exit mobile version